Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல். 2022 லக்னோ அணி செம பிளான்..!! 3 சூப்பர் வீரர்கள் தேர்வு.. அதிரடி..!!சரவெடி தான்..!!

லக்னோ: ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டில் புதிய அணியாக களமிறங்க உள்ள அகமதாபாத் அணியும், லக்னோ அணியும் சூப்பர் பிளான் போட்டு காய் நகர்த்தி வருகின்றன.

ஏலத்திற்கு முன்பே 3 வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பை பயன்படுத்தி அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், சுப்மான் கில் ஆகியோரை தேர்வு செய்தது.

இந்த நிலையில், லக்னோ அணி 3 வீரர்களை தேர்வு செய்துள்ளது. அதன் விவரங்களை தற்போது காண்போம்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கே.எல்.ராகுல் , அந்த அணியில் தொடர விரும்பவில்லை என அறிவித்தார் இதனையடுத்து அவருக்கு பிராக்கெட் போட்ட லக்னோ அணி, 15 கோடி ரூபாய் கொடுத்து ஓப்பந்தம் செய்துள்ளது. மேலும் அவரை கேப்டனாகவும் அறிவிக்க உள்ளது. கே.எல்.ராகுலை 11 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி 2018ஆம் ஆண்டு வாங்கிய நிலையில், அதை விட 4 கோடி ரூபாய்க்கு கூடுதலாக விலை போய் உள்ளார்

மார்கஸ் ஸ்டோனிஸ்

மார்கஸ் ஸ்டோனிஸ்

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ்க்கு தான் உண்மையான லக் என்றே சொல்ல வேண்டும். டெல்லி அணி 4.8 கோடி ரூபாய் கொடுத்து ஸ்டோனிஸை பெற்றது. அதில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரை தற்போது 11 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணி வாங்கியுள்ளது.

ரவி பிஸ்னாய்

ரவி பிஸ்னாய்

இன்னும் இந்தியாவுக்கே விளையாடாத சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாயை 4 கோடி ரூபாய் கொடுத்து தட்டி தூக்கியது. பஞ்சாப் அணிக்காக 14 போட்டியில் விளையாடி 12 விக்கெட்டுகளை பிஸ்னாய் எடுத்திருந்தார். தற்போது அவருக்கு 2 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

60 கோடி ரூபாய்

60 கோடி ரூபாய்

3 வீரர்களை ஓப்பந்தம் செய்ததன் மூலம் அந்த அணி 30 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் அந்த அணி 60 கோடி ரூபாயை வைத்து செலவு செய்யும் ஐ.பி.எல். ஏலம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதி நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Tuesday, January 18, 2022, 21:19 [IST]
Other articles published on Jan 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+