Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா நீ.. உலகின் நம்.1 பவுலரை பொளந்துகட்டிய 19 வயது வீரர்.. அசந்துப்போன ரசிகர்கள்!!

மும்பை: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் உலகின் நம்பர் 1 பவுலரை திலக் வர்மா திணறடித்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

தொடக்கமே சரிவு

தொடக்கமே சரிவு

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா 3 ரன்களுக்கும், இஷான் கிஷான் 14 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய இளம் வீரர் டேவால்ட் பிரேவிஸ் சற்று அதிரடி காட்டினார். எனினும் அவரின் பாட்ஷா நீண்ட நேரம் பழிக்கவில்லை. 19 பந்துகளில் 29 ரன்களை அடித்துவிட்டு வெளியேறினார்.

மிடில் ஆர்டர் பலம்

மிடில் ஆர்டர் பலம்

இதனால் 11 ஓவர்களில் 55 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக தடுமாறியது. அப்போது களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். இதில் சூர்யகுமார் 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். எனினும் அனைவரின் கவனமும் திலக் வர்மாவின் பக்கம் தான் இருந்தது. இதற்கு காரணம் ஒரே ஒரு ஓவர் தான்.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும், டி20ல் அசுரத்தனமான ஃபார்மிலும் இருக்கும் பேட் கம்மின்ஸ் இன்றைய போட்டியில் பங்குபெற்றார். அவர் வீசிய 16வது ஓவரை எதிர்கொண்ட திலக் வர்மா முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசி ஆச்சரியம் தந்தார். அடுத்த பந்தில் டாட், சிங்கிள் என எடுத்ததால், பேட் கம்மின்ஸை பார்த்து பயந்துவிட்டார் என நினைத்தனர். ஆனால் அங்கு தான் ஆப்பு இருந்தது. மீண்டும் 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி கம்மின்ஸை பதற்றத்தில் ஆழ்த்தினார்.

Recommended Video

இப்படியே இருந்தால் உனக்கு IPL-ல் இடம் கிடையாது.. Ishan Kishan-ஐ எச்சரித்த Hardik Pandya.. ஏன்?
மொத்த ரன்கள் எவ்வளவு

மொத்த ரன்கள் எவ்வளவு

முதல் முறையாக பேட் கம்மின்ஸின் பந்துவீச்சை எதிர்கொண்ட இந்தியாவின் 19வயது திலக் வர்மா, அவரின் ஓவரில் 6, 0, 1, 4, 1 என மொத்தமாக 13 ரன்களை குவித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, 27 பந்துகளில் 38 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Story first published: Wednesday, April 6, 2022, 23:01 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+