Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் நடுவே பீஸ்ட் பார்த்த கிரிக்கெட் வீரர்.. நெகடிவ் விமர்சனத்தை நம்ப வேண்டாம் என அறிவுரை

மும்பை: 2022ஆம் ஆண்டு சம்மர் இளைஞர்களுக்கு பயங்கர கொண்டாட்டத்தை தந்துள்ளது. 2 ஆண்டுகளாக கொரோனா பிடியில் இருந்த அனைவருக்கும் இந்த ஆண்டு விடுதலை தான்.

இது வெறும் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, நாடு தழுவிய மக்களுக்கும் தான். ஆர்ஆர்ஆர், ஐபிஎல், பீஸ்ட், கேஜிஎஃப் என திரும்பிய பக்கம் எல்லாம் பொழுது போக்காக அமைந்துள்ளது.

தங்கள் அபிமான திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ள படத்தை காலை நேரத்திலும், மாலை நேரத்தில் மனதுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டியையும் கண்டு களித்து வருகின்றனர்.

வசூல் சாதனை

வசூல் சாதனை

இந்த நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம், ரசிகர்களை மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பீஸ்ட் முன்பதிவிலேயே வசூல் சாதனை செய்ததாக செய்திகள் வெளியானது.

அபினவ் முகுந்த்

அபினவ் முகுந்த்

ஆனால், படத்திற்கு தொடக்கம் முதலே கலவையான விமர்சனத்தை பீஸ்ட் திரைப்படம் பெற்றது. இருந்தும் திரையரங்கில் மக்கள் கூட்டம் ஓயவில்லை. தற்போது அந்த வரிசையில் இணைந்து இருக்கிறார் தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அபினவ் முகுந்த் கிரிக்கெட் வர்ணனையும் செய்து வருகிறார்.

பீஸ்ட் விமர்சனம்

பீஸ்ட் விமர்சனம்

இந்த நிலையில், அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஐபிஎல் தொடருக்கு நடுவில் பீஸ்ட் படத்தை பார்த்து ரசித்தேன் என்று தெரிவித்துள்ளார். பொழுது போக்குகள் நிறைந்த அம்சங்கள் படத்தில் நிறைய இருப்பதாகவும், நான் படித்த நெகட்டிவ் ரிவீயூஸ் போல் படம் இல்லை என்று தெரிவித்தார். அனிரூத் இசை சிறப்பாக இருந்ததாகவும் அவர் பாராட்டினார்.

Recommended Video

IPL 2022:Ashwin-ஐ சீண்டிய Yuvraj Singh! Jos Butler குறித்து Tweet | OneIndia Tamil
விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

இதனிடையே, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, முருகன் அஸ்வின் ஆகியோர் விஜய் ரசிகர்கள். எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயோ பபுளில் இருப்பதால், அவர்களால் திரையரங்குகளுக்கு நேரில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகள் மனது வைத்தால் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்படலாம். இல்லையேனில் ஐபிஎல் முடிந்து தான் பீஸ்ட் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 13, 2022, 23:03 [IST]
Other articles published on Apr 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+