
முக்கிய போட்டி
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளுமே இதுவரை 11 போட்டிகளில் விளையாடி16 புள்ளிகளை பெற்றுள்ளன. பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் லக்னோ முதலிடத்திலும் குஜராத் 2வது இடத்திலும் உள்ளது. எனவே இன்று வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப் இடத்தை உறுதி செய்யும்.

தமிழக வீரருக்கு வாய்ப்பு
இந்நிலையில் இந்த முக்கியமான போட்டியில் தமிழக வீரர் சாய் கிஷோரை அறிமுகப்படுத்தியுள்ளது குஜராத் அணி. 25 வயதாகும் சாய் கிஷோர் இடதுகை ஆல்ரவுண்டராகும். இதுவரை 38 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 43 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரின் எகானமி வெறும் 5.46 மட்டுமே ஆகும். இதனால் சாய் சுதர்சனை நீக்கிவிட்டு, சாய் கிஷோரை கொண்டு வந்துள்ளனர்.

மேலும் 2 மாற்றங்கள்
இதுமட்டுமல்லாமல் மேலும் 2 மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. லாக்கி ஃபெர்க்யூசனுக்கு பதிலாக மேத்யூவ் வேட் மற்றும் பிரதீப் சான்வானுக்கு பதிலாக யாஷ் தயாலும் அணிக்கு திரும்பியுள்ளனர். இப்போட்டியில் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பு தரப்படும் என தகவல் வெளியான நிலையில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

லக்னோ மாற்றம்
இதே போல லக்னோ அணியிலும் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னணி ஸ்பின்னரான ரவி பிஷ்னாய் நீக்கப்பட்டு, கரன் சர்மா லக்னோ அணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றி கண்டுள்ள லக்னோ அணி இன்று பெரும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

ப்ளேயிங் 11 விவரம்
குஜராத் அணி: விருதிமான் சாஹா, சுப்மன் கில், மேத்யூவ் வேட், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவாட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், அல்சாரி ஜோசப், யாஷ் தயால், முகமது ஷமி
லக்னோ அணி : குயிண்டன் டிக்காக், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, ஆயுஸ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், கரன் சர்மா, துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், மோஷிஸ் கான்


Click it and Unblock the Notifications











