Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக சிங்கம் அறிமுகம்.. வாய்ப்பளித்த ஹர்திக் பாண்ட்யா.. குஜராத் vs பஞ்சாப் போட்டியில் சுவாரஸ்யம்!!

மும்பை: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிளாசிக் ப்ளேயர் அறிமுகமாகியுள்ளார்.

16வது லீக் போட்டியில் இன்று குஜராத் டைட்டான்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

குஜாராத் அணி

குஜாராத் அணி

ஐபிஎல் தொடரில் தனது முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது குஜராத் அணி. எனினும் இன்றைய போட்டிக்காக அணியில் 2 மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி வருண் ஆரோனுக்கு பதிலாக தர்ஷன் நீலக்கண்டே என்ற இளம் வீரர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இதே போல தமிழக வீரர் விஜய் சங்கர் நீக்கப்பட்டு மற்றொரு தமிழக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

யார் அந்த வீரர்

யார் அந்த வீரர்

சென்னையை சேர்ந்த சாய் சுதர்ஷன் தான் அந்த வீரர். தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் சென்னை அணிக்காக வெளுத்து வாங்கிய இவர் சராசரியாக ஒரு போட்டிக்கு 35 ரன்கள் வரை அடிக்கக்கூடியவர். கடந்தாண்டு 43 பந்துகளில் 87 ரன்களை விளாசித்தள்ளியிருந்தார். மிடில் ஆர்டரில் குஜராத் அணிக்கு தூண் போன்று நிலைத்து நின்று ஆடக்கூடியவர்.

பஞ்சாப் மாற்றம்

பஞ்சாப் மாற்றம்

இதே போல பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது இங்கிலாந்தின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோ இன்று பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகிறார். ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 28 போட்டிகளில் விளையாடி 1038 ரன்களை குவித்துள்ளார். இவரி சராசரி மட்டுமே 41.52 ஆகும்.

ப்ளேயிங் 11 விவரங்கள்

ப்ளேயிங் 11 விவரங்கள்

குஜராத் அணி : மேத்யூவ் வேட், சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி ஃபெர்க்யூசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே

பஞ்சாப் அணி : மயங்க் அகர்வால், ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டன், ஜானி பேர்ஸ்டோ, ஜித்தேஷ் சர்மா, ஷாருக்கான், ஒடியன் ஸ்மித், ககிஸ்கோ ரபாடா, ராகுல் சஹார், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்

Story first published: Friday, April 8, 2022, 19:40 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+