ஓ இதுதான் விஷயமா.. உனத்கட் பவுலிங்கை தோனி சுலபமாக அடித்தது இப்படிதான்.. ஃபினிஷர் இல்லையென கிண்டல்!
மும்பைக்கு எதிராக தோனி கடைசி ஓவரில் அதிரடி காட்டியது குறித்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Recommended Video
நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியின் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் தோனியின் ஃபினிஷிங் தான்.

சிஎஸ்கே பேட்டிங்
156 என்ற இலக்கை துரத்திய சென்னை அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி தான்.
ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட், மிட்செல் சாண்ட்னர் 11, ஷிவம் தூபே 13, கேப்டன் ஜடேஜா 3 என அடுத்தடுத்து ஏமாற்றினர். பொறுப்புடன் விளையாடிய ராபின் உத்தப்பா 30 ரன்கள், அம்பத்தி ராயுடு 40 ரன்களும் எடுக்க சிஎஸ்கே ஓரளவிற்கு மீண்டது.

தோனி அதிரடி
இதனால் சென்னை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஜெய்தேவ் உனத்கட் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் விழ, 2வது பந்து சிங்கிள் ஆனது. எனவே கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த தோனி 6, 4, 2, 4 என அடுத்தடுத்து ரன் விளாச, கடைசி பந்தில் வெற்றி பெற்றுக்கொடுத்தார். மும்பை அணி தொடர்ந்து 7வது தோல்வியை பதிவு செய்தது.

தோனி ஃபினிஷர் கிடையாது
தோனியின் ஃபினிஷிங்கை பாராட்டி வரும் நிலையில் மற்றொருபுறம் கிண்டலடித்து வருகின்றனர். அதாவது உனத்கட் எப்படி வீசுவார் என்பது தோனிக்கே தெரிந்தது தான் என்கின்றனர். கடந்த 2017ம் ஆண்டு உனத்கட் புனே அணியில் இருந்த போது, தோனி தான் அவருக்கு டெத் ஓவர் பவுலிங் வாய்ப்பு தந்தார். உனத்கட்டின் பவுலிங்கை மாற்றி, கடைசி ஓவரில் எப்படியெல்லாம் பந்துவீசினால், ரன்களை கட்டுப்படுத்த முடியும் என்ற வித்தையை சொல்லிக்கொடுத்தார். அதில் உனத்கட் வெற்றிகரமானவராகவும் திகழ்ந்தார்.

ரசிகர்கள் கிண்டல்
ஆனால் நேற்றைய போட்டியில் கற்றுக்கொடுத்த தோனிக்கு எதிராகவே உனத்கட்டை பயன்படுத்தினார் ரோகித். உனத்கட் எந்த மாதிரியான பவுலிங்கை போடுவார், பந்து எங்கு வரும் என்பதை "குரு" தோனி நன்கு அறிந்துவைத்திருந்தார். இதனால் தான் சரியாக குறிவைத்து ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க முடிந்தது என கூறப்படுகிறது. இதனால் தோனி ஒன்னும் பழைய ஃபினிஷர் கிடையாது, தெரிந்து செய்த ஒரு ட்ரிக் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications