மும்பை அணிக்கு வந்த தென்னாப்பிரிக்க அசுரன்.. ஸ்டார் வீரரின் விலகலால் நடவடிக்கை..இனி சிக்ஸர் மழை தான்
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் விலகியதால் தென்னாப்பிரிக்காவில் இருந்து அதிரடி நாயகன் களமிறக்கப்பட்டுள்ளார்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தாண்டு மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.
9 போட்டிகளில் இதுவரை விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது.

மும்பை அணி பரிதாபம்
எனினும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு முடித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. அதற்காக கடந்த போட்டியில் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தது. இன்னும் தொடர்ந்து வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்புகளை கெடுக்கலாம். எனவே அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டார் வீரர் விலகல்
இந்த சூழலில் தான் அணியின் முக்கிய பவுலர் டைமல் மில்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதுவரை போட்டிகளில் ஆடிய டைமல் மில்ஸ் 6 விக்கெட்களை எடுத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவில் இருந்து அதிரடி பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த ட்ரிஸ்ட்ன்
21 வயதாகும் ஸ்டப்ஸ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். ஜிம்பாவே சுற்றுப்பயணத்தில் இருந்த இவரை ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணி வாங்கியது. இதனையடுத்து அவர் அங்கிருந்து நேரடியாக மும்பைக்கு வந்து சேர்ந்துள்ளார். அடுத்த 3 நாட்கள் குவாரண்டைனில் இருந்த பிறகு பயிற்சியை தொடங்குவார் எனத்தெரிகிறது.

அதிரடி நாயகன்
ஸ்டப்ஸ் இதுவரை 17 டி20 போட்டிகளில் 505 ரன்களை குவித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ஏட் 157.14 ஆகும். இதில் 3 அரைசதங்களும் அடங்கும். மும்பை அணி இன்று குஜராத் அணியுடன் மோதுகிறது. எனினும் இதில் ஸ்டப்ஸ் விளையாட முடியாது. எனினும் இவர் ஏற்கனவே நல்ல ஃபார்மில் இருப்பதால், அடுத்த போட்டியில் நேரடியாக அணிக்குள் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications