Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன தான் ஆச்சு இவருக்கு..புயலாய் வந்து புஸ்வானமாக மாறிய வெங்கடேஷ் ஐயர்..காலியாகும் இந்திய அணி இடம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருவது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வெங்கடேஷ் ஐயர் இம்முறை அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

கடந்த முறை, புள்ளி பட்டியலில் அடி பாதளத்தில் இருந்த கொல்கத்தா அணி இறுதிப் போட்டி வரை சென்றது.

இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

அதற்கு காரணம் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரின் அதிரடி ஆட்டமும், பவுலிங்கும் தான். வெங்கடேஷ் ஐயரின் இந்த அபார ஆட்டத்தால் இந்திய அணியில் இடம் அவரை தேடி வந்தது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாத நிலையில், அவரை வெங்கடேஷ் ஐயர் ஓரங்கட்டினார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

ஆனால் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெங்கடேஷ் ஐயர் தனது பேட்டிங்கில் முன்பு போல் விளையாடவில்லை. நடப்பு சீசனில் 9 போட்டியில் விளையாடி 132 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் ஒரு அரைசதம் அடங்கும். அந்த அரைசதமும் வேகமாக அடித்த ரன்கள் கிடையாது. இதனால் கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனிலே அவரது இடம் கேள்விக்குறியாகி விட்டது.

நடிகையிடம் ரொமன்ஸ்

நடிகையிடம் ரொமன்ஸ்

இதனால், வெங்கடேஷ் ஐயர் வெறும் ஒரு சீசனில் மட்டும் பூக்கும் குறிஞ்சி மலர் என்று சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் வெங்டேஷ்க்கு எதிர்பாராத திடீர் புகழ் வந்ததும், அவருடைய கவனம் கிரிக்கெட்டிலிருந்து சென்றுவிட்டது என்று விமர்சனம் செய்தனர். அதற்கு தகுந்தார் போல், கடந்த மாதம் தெலுங்கு நடிகையிடம் ரொமன்ஸ் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

விமர்சனம்

விமர்சனம்

வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடினாலும், அவரது காலை குறி பார்த்து பந்தவீசினால் அவர் அடிக்க திணறுகிறார் என்று அப்போதே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறினர். ஆனால், அவரை நேடியாக இந்திய அணிக்கு அழைத்து சென்று ஆட வைத்து அழகு பார்த்தது தேர்வுக்குழு. இனி ஹர்திக் பாண்டியா இடத்துக்கு அவர் தான் என்றும் கூறப்பட்டது. தற்போது புயலாக வந்து புஸ்வானமாக மாறிவிட்டார் வெங்கடேஷ் ஐயர்.

Story first published: Friday, April 29, 2022, 18:20 [IST]
Other articles published on Apr 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+