Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரர் அதிரடியாக நீக்கம்.. வாழ்வா? சாவா? கட்டத்தில் ஸ்ரேயாஸ் முடிவு.. ப்ளே ஆஃப்-க்கு செல்லுமா??

மும்பை: இந்திய அணியின் எதிர்காலம் என பார்க்கப்பட்ட தமிழக வீரரை புறக்கணித்துவிட்டு கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இக்கட்டான நிலைமை

இக்கட்டான நிலைமை

அந்த அணிக்கு இது ஒரு வாழ்வா? சாவா? கட்டம் ஆகும். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் ரேஸில் நீடிக்க முடியும். இதற்காக அதிரடி மாற்றம் ஒன்றை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்துள்ளார்.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

அதாவது கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் தூணாக இருந்த தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயரை அணியில் இருந்து நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக அனுக்குள் ராய் களமிறக்கப்பட்டுள்ளார். நடப்பு தொடரில் வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 126 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். எனவே பொறுமை இழந்த ஸ்ரேயாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

இதே போல கடந்த போட்டியில் மும்பை அணியுடன் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் அணி கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே இதற்காக டேர்லி மிட்செல்லை நீக்கிவிட்டு, கருண் நாயரை ப்ளேயிங் 11க்குள் கொண்டு வந்துள்ளனர். இந்திய களங்களில் அவருக்கு நல்ல அனுபவம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

கொல்கத்தா: ஆரோன் ஃபிஞ்ச், சுனில் நரேன், ஸ்ரேயாஸ் ஐயர், பாபா இந்திரஜித், அனுக்குள் ராய், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், உமேஷ் யாதவ், டிம் சௌத்தி, ஷிவம் மாவி

ராஜஸ்தான்: ஜாஸ் பட்லர், தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன், கருண் நாயர், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், ரவி அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், குல்தீப் சென்

Story first published: Monday, May 2, 2022, 21:09 [IST]
Other articles published on May 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+