Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல நடிகைக்கு ரூட்விட்ட தமிழக கிரிக்கெட் வீரர்.. இன்ஸ்டாவில் போட்ட கமெண்டால் சிக்கினார்

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி புகழ் பெற்றவர் தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்.

ரஞ்சி கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடினாலும், ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் வெங்கடேஷ் ஐயர் பிரபலமானார்.

படித்தது சி.ஏ. என்றாலும், தமக்கு கிடைத்த வேலையை உதறிவிட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி, அதில் வெற்றியும் கண்டார்.

சொதப்பும் வெங்கடேஷ்

சொதப்பும் வெங்கடேஷ்

பல திறமையான வீரர்ககளுக்கு மத்தியில், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக விளங்கி, தற்போது இந்திய அணியிலும் இடம்பிடித்துவிட்டார் வெங்கடேஷ் ஐயர். ஆனால் கடந்த சீசனில் கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு வர காரணமாக இருந்த வெங்கடேஷ், இந்த சீசனில் மூன்று போட்டியிலும் ஜொலிக்கவில்லை. 16, 10,3 ரன்களில் ஐயர் ஆட்டமிழந்தார்.

ரொமான்ஸ்

ரொமான்ஸ்

இந்த நிலையில், 27 வயதான வெங்கடேஷ் ஐயர் காதல் வலையில் சிக்கிவிட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் வெட்ட வெளியில் பிரபல நடிகை பிரியங்கா ஜவால்கருக்கு ரொமான்ஸ் செய்து நெட்டிசன்களிடம் வசமாக சிக்கினார் வெங்கடேஷ் ஐயர். பிரியங்கா ஜவால்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

கமெண்ட்டில் சிக்கினார்

கமெண்ட்டில் சிக்கினார்

விஜய் தேவர்கொண்டாவுடன் டேக்ஸிவாலா படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா, இன்ஸ்டாகிராமில் வழக்கம் போல் புகைப்படங்களை அதிகமாக பதிவிட்டு வந்துள்ளார். இதனை எல்லாம் சைலண்டாக ஃபாலோ செய்து வந்த வெங்கடேஷ் ஐயர், திடீரென்று ஒரு புகைப்படத்திற்கு க்யூட் என்று கமெண்ட் போட்டார்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

அதற்கு பிரியங்காவும் யாரு, நீங்களா என்று பதில் கமெண்ட் போட இது ரசிகர்கள் கண்ணில் சிக்கியது. இதனால் இருவருக்கும் சம்திங், சம்திங் என நெட்டிசன்கள் ஓட்ட தொடங்கிவிட்டனர். இந்த சீசனில் வெங்கடேஷ் சொதப்புவதற்கு இது தான் காரணமா என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இனி இவ்விருவரின் புகைப்படத்தையும் சேர்ந்து பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Story first published: Tuesday, April 5, 2022, 15:53 [IST]
Other articles published on Apr 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+