Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரரால் தோனிக்கு வந்த பிரச்சினை.. பயிற்சி போட்டியிலேயே சரமாரி அடி.. சிக்கப்போகும் சிஎஸ்கே!!

மும்பை: ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் பயம் காட்டியுள்ளார்.

15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

கொல்கத்தா அணி அப்டேட்

கொல்கத்தா அணி அப்டேட்

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 நாட்களுக்கும் மேலாக சூரத்தில் பயிற்சியை முடித்துவிட்டு, தற்போது மும்பை வந்துள்ளனர். அவர்களின் திட்டம், சிஎஸ்கே ப்ளேயிங் 11 என்பது குறித்த அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகமாக வைத்திருந்தது. ஆனால் இன்று வெளியாகியுள்ள கொல்கத்தா அணியின் அப்டேட் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

கொல்கத்தா அணி தனது இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டியை நடத்தியுள்ளது. இதில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் மட்டும் தனி கவனத்தை ஈர்த்துள்ளார். மொத்தம் 47 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், சிக்ஸர் மழையுடன் 87 ரன்களை குவித்து அசத்தினார். கடந்த சீசனில் விட்ட இடத்தை இந்த சீசனிலும் தொடர்கிறார் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தோனிக்கு தலைவலி

தோனிக்கு தலைவலி

கடந்தாண்டு 2வது பாதி தொடரில் இருந்து விளையாடிய வெங்கடேஷ் ஐயர், ஒவ்வொரு ஆட்டத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றார். ஒருகட்டத்தில் தோனியால் கூட வெங்கடேஷ் ஐயரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் பலனாக நேரடியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் வெங்கடேஷ் ஐயருக்கு கிடைத்தது.

Recommended Video

IPL 2022: CSK’s New Recruit Shivam Dube Heaps Massive Praise on MS Dhoni | Oneindia Tamil
டி20 உலகக்கோப்பை அணி

டி20 உலகக்கோப்பை அணி

இந்தாண்டு ஐபிஎல் தொடர், டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வுக்கும் முக்கிய அடித்தளமாக இருக்கப் போகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு இதுதான் பெரிய வாய்ப்பாக உள்ளது. எனவே இதே ஃபார்மில் வெங்கடேஷ் ஐயரும் தொடர்ந்தால், இந்திய தேர்வுக்குழுவின் கவனத்தை பெறுவார்.

Story first published: Wednesday, March 23, 2022, 18:58 [IST]
Other articles published on Mar 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+