Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தான் பா உண்மையான ஆர்சிபி.. பெங்களூரு அணியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. கோலி ரசிகர்கள் சோகம்

மும்பை: ஐபிஎல் தொடரில் உண்மையான ஆர்சிபி அணி திரும்பி வந்துவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சென்னை, மும்பை அணிகளுக்கு பிறகு அதிகபட்ச ரசிகர்களை கொண்ட அணி எது என்று கேட்டால் அது நம்ம ஆர்சிபி தான்.

ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து பெங்களூரு அணிக்காக விளையாடுவதால், அவரது ரசிகர்களும் ஆர்சிபி அணியின் தீவிர பக்தர்கள்.

கோப்பை இல்லை

கோப்பை இல்லை

ஆர்சிபி அணியில் தான் கெயில், டிவில்லியர்ஸ், தில்சான், கேஎல் ராகுல், மிட்செல் ஸ்டார்க் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் அந்த அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. அதற்கு காரணம் விராட் கோலியின் கேப்டன்ணியும், அந்த அணி ஐபிஎல் தொடருக்காக செய்யும் யுத்திகள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

ஆர்சிபி ஏதேனும் வெற்றி பெற்றால் கண்ணன் தேவி டீ பொடி, சிஎஸ்கே புடி புடி என்று ஆட்டம் போட்டு மற்ற அணி ரசிகர்களை வெறுப்பு ஏற்றுவார்கள். இதனால் ஆர்சிபி அணி எப்போது எல்லாம் சறுக்கினாலும், அவர்களை மற்ற அணி ரசிகர்கள் கிண்டல் செய்து ஓட்டுவார்கள். ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரும், குறைந்தபட்ச ஸ்கோரும் இதே நாள் ஆர்சிபி அணியால் தான் படைக்கப்பட்டது.

புதிய மாற்றம்

புதிய மாற்றம்

அந்த அணி 49 ரன்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி இதே நாள் சுருண்டதால் ஆர்சிபி அணியை 49 கேங் என்று சொல்லி தான் மற்ற அணி ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில், ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி அணி புத்தம் புதிய மாற்றத்துடன் களமிறங்கியது. கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில், டுபிளஸிஸ் புதிய கேப்டனாக பதவியேற்றார்.

Recommended Video

RCB vs SRH: SRH Race To Nine-Wicket Win After RCB Collapse To 68 All Out | Oneindia Tamil
சறுக்கிய ஆர்சிபி

சறுக்கிய ஆர்சிபி

டுபிளஸிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் என்று ஆர்சிபி அணி இந்த ஆண்டு 8 போட்டியில் விளையாடி 5 வெற்றியை பெற்றது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில், தற்போது பழைய குருடி கதவை திறடி என்பது போல் மீண்டும் 68 ரன்களுக்கு சுருண்டது.இதனால் பழைய ஆர்சிபி அணி திரும்ப வந்துவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 23, 2022, 22:49 [IST]
Other articles published on Apr 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+