Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓப்பனிங் வீரராக விராட் கோலி.. ஆர்சிபி ப்ளேயிங் 11ல் டூப்ளசிஸ் சர்ஃப்ரைஸ்..மாற்றத்திற்கான காரணம் என்ன

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி ஓப்பனிங் களமிறங்கவுள்ளார்.

இரு அணிகளும் மோதி வரும் 39வது லீக் போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூப்ளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி மாற்றம்

ஆர்சிபி அணி மாற்றம்

இந்த போட்டிக்காக ஆர்சிபி அணி ஒரே ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் அதுதான் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது. ஓப்பனிங்கில் டூப்ளசிஸுடன் களமிறங்கி வந்த இளம் வீரர் அனுஜ் ராவத்தை நீக்கியுள்ளனர். இந்த மாற்றம் விராட் கோலி ஓப்பனிங் இறங்குவதற்காக ஸ்பெஷலாக கொண்டு வரப்பட்டுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

நடப்பு சீசனில் விராட் கோலியின் ஃபார்ம் படு மோசமாக உள்ளது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 41* vs PBKS, 12 vs KKR, 5 vs RR, 48 vs MI, 1 vs CSK, 12 vs DC, 0 vs LSG, 0 vs SRH என மொத்தமாக 119 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். கடந்த 2 போட்டிகளாக தொடர்ந்து டக் அவுட்டாகியுள்ளார். எனவே இனி அவர் கம்பேக் கொடுத்தே தீர வேண்டும்.

ஓப்பனிங்கில் ரெக்கார்ட்

ஓப்பனிங்கில் ரெக்கார்ட்

கோலி ஓப்பனிங் களமிறங்கும் போது எந்தவித அழுத்தமும் இன்றி முழு சுதந்திரமாக விளையாடுவார். பவர்ப்ளேவில் அவரின் ரெக்கார்ட் அட்டகாசமாக உள்ளது. எனவே அதனை செயல்படுத்தி பார்ப்பதற்காக அனுஜ் ராவத்தை நீக்கிவிட்டு, அந்த இடத்தை கோலிக்கு கொடுத்துள்ளனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

டூப்ளசிஸ், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ராஜத் பட்டிதார், சபாஷ் அகமது, தினேஷ் கார்த்திக், வானிண்டு ஹசரங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜோஸ் ஹாசல்வுட், முகமது ஷமி

Story first published: Tuesday, April 26, 2022, 19:25 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+