Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஊ சொல்றியா மாமா”.. விராட் கோலி ‘தர லோக்கலாக’ போட்ட குத்தாட்டம்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

மும்பை: பேட்டிங் குறித்து விமர்சனங்கள் ஒருபுறம் குவிந்து வந்தாலும், விராட் கோலி புஷ்பா பாட்டிற்கு குத்தாட்டம் போட்ட வீ டியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Recommended Video

IPL 2022: Virat Kohli Shows Off Dance To ‘Oo Antava’ Song With RCB Teammates | Oneindia Tamil

டூப்ளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளது.

இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கோலி மீது விமர்சனங்கள்

கோலி மீது விமர்சனங்கள்

ஆனால் விராட் கோலியின் நிலைமை தான் மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை அவர் விளையாடிய 9 போட்டிகளில் 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி என்பது 16 ரன்கள் மட்டும் தான். எனவே அவர் கிரிக்கெட்டில் இருந்து சற்று காலம் ஓய்வெடுக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 மேக்ஸ்வெல் பார்டி

மேக்ஸ்வெல் பார்டி

இந்த சூழ்நிலையில் விராட் கோலி எந்தவித கவலையும் இன்றி ஜாலியாக குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. ஆர்சிபி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. இவர்களின் திருமணத்திற்கான பார்ட்டி நேற்று ஆர்சிபி அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கோலி குத்தாட்டம்

கோலி குத்தாட்டம்

இதில் அனைத்து வீரர்களும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஜொலித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு புறம் புஷ்பா படத்தில் வரும் "ஊ அண்டாவா மாமா" பாடலுக்கு விராட் கோலி "தர லோக்கலாக" இறங்கி குத்தாட்டம் போட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகையும், கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் பங்கேற்றிருந்தார்.

ஆர்சிபிக்கு சிக்கல்

ஆர்சிபி அணி விளையாடிய கடைசி 2 போட்டிகளிலும் படு மோசமான தோல்வியை பெற்றிருந்தது. எனவே கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த அணி அடுத்ததாக வரும் ஏப்ரல் 30ம் தேதியன்று குஜராத் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலியும் கம்பேக் தர வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 28, 2022, 18:12 [IST]
Other articles published on Apr 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+