Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே இதுவரை செய்யல.. கிங் கோலி செய்யப்போகும் பிரமாண்ட சாதனை.. ஆர்சிபி vs லக்னோ போட்டியில் மாஸ்!

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று ஆர்சிபி வீரர் விராட் கோலி இதுவரை யாருமே செய்திராத பிரமாண்ட சாதனையை படைக்கவுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதவுள்ளன.

ஏற்கனவே குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்ட சூழலில், இன்று வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.

 முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இந்த போட்டியில் ஒட்டுமொத்த ஆர்சிபியை விட, விராட் கோலியின் மீதுதான் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. ஏனென்றால் கடந்த போட்டியில் குஜராத்திற்கு எதிராக 54 பந்துகளில் 73 ரன்களை விளாசி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். எனவே இன்று அவரின் பேட்டிங் தான் ஆர்சிபியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கோலி பிரமாண்ட சாதனை

கோலி பிரமாண்ட சாதனை

இந்நிலையில் கோலிக்கு தீணி போடும் வகையில் இன்று ஒரு சம்பவம் உள்ளது. அதாவது விராட் கோலி இன்று மட்டும் அரைசதம் அடித்துவிட்டால், ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக 50 முறை அரைசதங்கள் அடித்த வீரர் என்ற மிகப்பெரிய பெருமையை பெறுவார். இதுவரை யாருமே இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லை.

கோலியின் ரெக்கார்ட்

கோலியின் ரெக்கார்ட்

கோலி இன்றும் அரைசதம் அடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அவர் தரமான ரெக்கார்டை வைத்துள்ளார். இங்கு இதுவரை 307 ரன்களை குவித்துள்ளார். சராசரியாக 43.85 ரன்களை அடிக்கிறார். இதில் 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.

கடைசி போட்டி எப்போது?

கடைசி போட்டி எப்போது?

விராட் கோலி இங்கு கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடினார். அப்போது வெறும் 58 பந்துகளில் அவர் 100 ரன்களை அடித்து அசத்தினார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 172. 41 ஆகும். எனவே இன்றும் பேட்டிங் ட்ராக் நன்றாக இருப்பதால், நிச்சயம் ஒரு தரமான செய்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, May 25, 2022, 18:11 [IST]
Other articles published on May 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+