Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை கவனித்தீர்களா ? சிஎஸ்கேவுக்கு எதிராக கோலி படைக்கப்போகும் பிரமாண்ட சாதனை.. இன்று சம்பவம் இருக்கு

மும்பை: சிஎஸ்கே அணிக்கு எதிராக பிரமாண்ட சாதனை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் ரேஸில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஃபார்முக்கு வந்த கோலி

ஃபார்முக்கு வந்த கோலி

இன்றைய ஆட்டத்தில் ஸ்பெஷல் என்னவென்றால் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இவர் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 58 ரன்களை அடித்து அசத்தினார். இதனால் இன்றைய போட்டியிலும் சிஎஸ்கேவுக்கு தலைவலி கொடுப்பார் எனத் தெரிகிறது.

கோலி சாதனை

கோலி சாதனை

இந்நிலையில் இன்றைய போட்டியில் கோலி பிரமாண்ட சாதனை ஒன்றும் படைக்க காத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிரான விராட் கோலி இதுவரை 949 ரன்களை அடித்துள்ளார். இன்று மட்டும் 51 ரன்களை அடித்துவிட்டால், ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவுக்கு எதிராக 1000 ரன்களை அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னதாக ஷிகர் தவான் இதனை படைத்துள்ளார்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

சிஎஸ்கேவுடன் மோதுவதற்காக இன்று விராட் கோலி தனக்கு பிடித்தமான பளுதூக்கும் உடறபயிற்சியை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மேற்கொண்டார். மிகவும் அட்டகாசமான ஃபிட்னஸுடன் உள்ள கோலி, பளுதூக்கி அதனை கீழே இறக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் இன்று தரமான சம்பவம் உள்ளது என கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

RCB vs CSK - Dhoni's Masterstroke, Maheesh Theekshana Three Wickets In One Over | Oneindia Tamil
தோனியும் சாதனை

தோனியும் சாதனை

இது ஒருபுறம் இருக்க, தோனியும் இன்று முக்கிய சாதனையை படைக்கவுள்ளார். ஆர்சிபி அணிக்கு எதிராக தோனி இதுவரை 836 ரன்களை குவித்துள்ளார். இதில் 46 சிக்ஸர்களும் அடங்கும். இன்று 4 சிக்ஸர்களை மட்டும் அடித்துவிட்டால், ஐபிஎல்-ல் ஒரு அணிக்கு எதிராக 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

Story first published: Wednesday, May 4, 2022, 18:26 [IST]
Other articles published on May 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+