Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் கோல்டன் டக்கான கோலி.. இந்திய அணி இடமும் காலியாகிறது..? என்ன தான் பிரச்சினை?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி , நடப்பு ஐபிஎல் தொடரில் 3வது முறையாக கோல்டன் டக்காகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

Recommended Video

Virat Kohli 3வது முறையாக Golden Duck! ரசிகர்கள் வருத்தம் | Oneindia Tamil

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பெங்களூரு அணி அதே வீரர்களுடன் களமிறங்கியது. ஐதராபாத் அணியில் சுச்சித் மற்றும் ஆப்கான் வீரர் ஃபருக்கி சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோல்டன் டக்

கோல்டன் டக்

முதல் பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜெகதிஸ் சுச்சித், முதல் பந்தை வீச, அதேனை விராட் கோலி மிட் விக்கெட் பகுதியில் அடிக்க முற்பட்டு, வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார். இதனையடுத்து முதல் பந்திலேயே ஆபத்து நீங்கிவிட்டது என ஐதராபாத் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

இதனையடுத்து ஏமாற்றத்துடன் தலையை கீழே குணிந்தவாறே பெவிலியன் நோக்கி நகர்ந்தார். அப்போது விரக்தியில் தலையில் கோலி கை வைத்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி அடித்த குறைவான ரன்கள் மற்றும் சராசரி என்றால் அது இது தான். இதுவரை 12 போட்டியில் விளையாடியுள்ள கோலி, 216 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 19.6

300 ரன்னை தொடுவாரா

300 ரன்னை தொடுவாரா

இதற்கு முன்பு விராட் கோலி குறைவான ரன்களை அடித்தது 2017ஆம் ஆண்டு தான். அதில் 10 போட்டியில் விளையாடி 308 ரன்களை விராட் கோலி அடித்துள்ளார். தற்போது குறைந்தது கோலிக்கு 2 போட்டிகள் எஞ்சி உள்ளன. அதில் கோலி எதாவது ரன் அடித்தால் மட்டுமே 300 ரன்களை தொட முடியும்.

இந்திய அணி இடத்துக்கு ஆபத்து

இந்திய அணி இடத்துக்கு ஆபத்து

ஒரு காலத்தில் சுழற்பந்துவீச்சு என்றால் கோலிக்கு அல்வா சாப்பிடுவது போல்,தற்போது அவர் அதிக முறை சுழற்பந்துவீச்சில் தான் ஆட்டமிழந்து வருகிறார். கடந்த போட்டியிலும் மொயின் அலி பந்தில் தான் போல்ட் ஆனார். இப்படி ஒரு குறை உள்ள வீரர் இந்திய அணியில் எப்படி 3வது வீரராக களமிறங்க முடியும். இதனால் விராட் கோலியின் இந்திய அணியின் இடத்துக்கு உண்மையாகவே ஆபத்து வந்துவிட்டது.

Story first published: Sunday, May 8, 2022, 18:37 [IST]
Other articles published on May 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+