Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு ஆத்திரமா!! ஸ்டம்பை உடைக்க பார்த்த விராட் கோலி.. வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி- என்ன காரணம்

ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி பயிற்சியின் போது கடும் ஆத்திரத்தில் இருந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.

ஆர்சிபி அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் சிறப்பாக தான் உள்ளது. வெற்றி வாய்ப்பும் அதிகம் உள்ளது. ஆனால் விராட் கோலி மட்டும் மகிழ்ச்சியாக இல்லை.

விராட் கோலிக்கு சிக்கல்

விராட் கோலிக்கு சிக்கல்

கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட், பேட்டிங்கில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். ஆனால் நடப்பு தொடரில் 3 போட்டிகளை சேர்த்து மொத்தமாக 58 ரன்களை மட்டும் தான் அடித்துள்ளார். முதல் போட்டியில் 41 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் 2வது போட்டியில் 12 ரன்களுக்கெல்லாம் நடையை கட்டினார். 3வது போட்டியில் 5 ரன்களுக்கு ரன் அவுட்டாகி ஏமாந்தார்.

 ஸ்பெஷல் ட்ரெய்னிங்

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

இதனால் தன்னை நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ள விராட் கோலி, ஸ்பெஷல் பயிற்சி எடுத்து வருகிறார். அதாவது ஸ்பின்னர்களுக்கு எதிராக தான் சமீப காலமாக விராட் கோலி அதிக முறை அவுட்டாகிறார். இதனையடுத்து அதற்காக முழுவதுமாக சுழற்பந்துவீச்சாளர்களை பவுலிங் போடவிட்டு பயிற்சி பெற்று வருகிறார்.

ஆத்திரமடைந்த கோலி

ஆத்திரமடைந்த கோலி

இந்நிலையில் அதில் நினைத்தது நடக்கவில்லை. ஸ்பின்னர் ஒருவர் நன்கு டேர்ன் செய்து வீசிய பந்தை, விராட் கோலி கட் ஷாட் ஆட நினைத்து ஸ்டம்ப் அவுட் ஆனார். எவ்வளவு பயிற்சி செய்தும் சொதப்புகிறதே என ஆத்திரமடைந்த கோலி, ஸ்டம்பை பேட்டால் ஓங்கி அடித்து நொறுக்க முயன்றார். அதன் பின்னர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பந்தின் மீது கோபத்தை காட்டினார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

விரக்தியில் விராட் கோலி செய்த விஷயங்கள் வீடியோவாக தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அவர் இருக்கும் கோபத்திற்கு இன்று மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்யாமல் விடமாட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். எனினும் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, April 9, 2022, 18:35 [IST]
Other articles published on Apr 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+