
கோலியின் சோகம்
இதற்காக அணி நிர்வாகம் நேரடியாக முதலில் விராட் கோலியை தான் அனுகியுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் நடப்பு சீசனில் கோலியின் ஃபார்ம் படு மோசமாக உள்ளது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 41* vs PBKS, 12 vs KKR, 5 vs RR, 48 vs MI, 1 vs CSK, 12 vs DC, 0 vs LSG, 0 vs SRH என மொத்தமாக 119 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

கோலிக்கு கடும் நெருக்கடி
இதுகுறித்து நடந்த ஆலோசனையில், டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் மட்டுமே அணியை தூக்கி நிறுத்த முடியாது. அவர்கள் தடுமாறினால் மொத்த அணியும் சரிகிறது. எனவே விராட் கோலி மீண்டும் தன்னை நிரூபித்தால் மட்டுமே ஆர்சிபியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று ஸ்பெஷல் நாள்
ஆர்சிபி அணி ஒவ்வொரு முறையும் பெரிய அடிவாங்கும் போதெல்லாம், அடுத்த போட்டியிலேயே விராட் கோலி பேட்டிங்கில் பதிலடி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் 68 ஆல் அவுட் என குவிந்து வரும் விமர்சனங்களுக்கு இன்று தரமான பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபியின் நிலைமை
ஆர்சிபி அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால், ஒரு படி முன்னேறி 4வது இடத்தை தக்கவைக்கும். ஆனால் இதெல்லாம் கோலியின் கையில் தான் இன்று உள்ளது


Click it and Unblock the Notifications