Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - ஆர்சிபி Vs ஆர்ஆர் இன்று மோதல்- மகத்தான சாதனை படைக்க போகும் விராட் கோலி

மும்பை: ஐபிஎல் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் இன்று நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

விளையாடிய 2 போட்டியிலும் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. ஆனால் பெங்களூரு அணி ஒரு தோல்வி, ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் உள்ளது.

கடந்த சீசனில் விளையாடிய 14 போட்டியில் ஐந்தில் மட்டுமே வென்ற ராஜஸ்தான் அணி, இம்முறை பேட்டிங், பந்துவீச்சு என பலமான அணியை தேர்வு செய்துள்ளது.

பலமான ராயல்ஸ்

பலமான ராயல்ஸ்

பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மயர் போன்ற பலமான பேட்டிங் வரிசையை கொண்ட ராஜஸ்தான் அணி, முதல் ஆட்டத்தில் 210 ரன்கள் அடித்தும், 2வது ஆட்டத்தில் 193 ரன்கள் அடித்தும் வென்றது, டாஸை வென்று 2வதாக பேட்டிங் செய்யும் அணி தான் வெல்லும் என்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து வென்றது.

மிரட்டலான பந்துவீச்சு

மிரட்டலான பந்துவீச்சு

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சும் மிரட்டலாகவே உள்ளது. அஸ்வின், சாஹல் கூட்டணி சுழற்பந்துவீச்சிலும், பிரஷித் கிருஷ்ணா, பவுல்ட் கூட்டணி வேகப்பந்துவீச்சிலும் கலக்கி வருகின்றனர். கடந்த சீசன் முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை சாஹல் படைத்துள்ளார்.

ஆர்சிபி

ஆர்சிபி

பெங்களூரு அணி விளையாடிய 2 போட்டியும் அந்த அணிக்கு ரோலர் கோஸ்டர் ரைடு போலவே உள்ளது. முதல் போட்டியில் பந்துவீச்சு சொதப்ப, 2வது ஆட்டத்தில் பேட்டிங் காலை வாரியது எனினும் ஆர்சிபி வென்றது. இதனால் ராஜஸ்தானை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக ஆர்சிபிக்கு இருக்காது.

விராட் சாதனை

விராட் சாதனை

இதுவரை இவ்விரு அணிகளும் மோதிய 24 போட்டியில் ஆர்சிபி 12 போட்டியிலும், ரொஜஸ்தான் 10 போட்டியிலும் வென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி ஒரு பவுண்டரி அடித்தால் ஐபிஎல் தொடரில் 550 பவுண்டரி மற்றும் 200 சிக்சர் அடித்த ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை படைப்பார்.

Story first published: Tuesday, April 5, 2022, 12:29 [IST]
Other articles published on Apr 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+