“என்னா மனுஷன்யா.. ” தோற்றாலும் விராட் கோலி செய்த விஷயம்.. நெகிழ்ச்சி கடலில் ரசிகர்கள் - வீடியோ!
அகமதாபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி செய்த விஷயம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் நேற்று ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி 157/8 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 161/3 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

கோலி சொதப்பல்
இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி சொதப்பியதும் ஆர்சிபியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தொடக்கத்திலேயே ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கை கொடுத்த விராட் கோலி, பிரஷித் கிருஷ்ணாவின் ஓவரில் வெறும் 7 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.

சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் கோலி செய்த மற்றொரு விஷயம் ரசிகர்களை மனம் உருகவைத்துள்ளது. ஆட்டத்தின் முதல் ஓவரில் ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தை விராட் கோலி ஸ்கொயர் திசையில் சிங்கிள் அடித்துவிட்டு சிங்கிள் ஓடினார். பந்து நேரடியாக ஜாஸ் பட்லரிடம் செல்ல, அதை நேரடியாக ஸ்டம்ப்பை நோக்கி த்ரோ வீசினார்.

விராட் கோலியின் செயல்
விராட் கோலி எந்தவித பிரச்சினையும் இன்றி ரன் ஓடிவிட்டார். ஆனால் பட்லர் வீசிய த்ரோ கோலியின் காலில் பட்டு ஓவர் த்ரோவாக சென்றது. அப்போது கோலி நினைத்திருந்தால் 2வது ரன் எடுக்க ஓடியிருக்க முடியும். ஆனால் அவர் உடனடியாக கைகளை மேலே தூக்கி 2வது ரன் ஓடக்கூடாது, என்காலில் பந்து பட்டது என கூறினார்.
ரசிகர்களின் பாராட்டு
ஐபிஎல் விதிமுறைகளில் இதுபோன்று எதுவும் இல்லையென்றாலும், நியாயம் என்பதற்காக விராட் கோலி செய்த இந்த விஷயம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 'spirit of cricket' என கோலியின் பெயரை கூறி இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications