For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பைக்கு ஆதரவு அளிக்கும் கோலி.. மைதானத்திற்கு நேரில் செல்வோம் என குசும்பு.. ரோகித் காப்பாத்துப்பா

மும்பை: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு செல்ல வேண்டும் என்றால் டெல்லி அணியை மும்பை வீழ்த்த வேண்டும்.

IPL 2022- Virat kohli says He will be in attendance to supporting MI

ஒரு வேலை டெல்லி வெற்றி பெற்றால், பெங்களூரு அணியின் ரன் ரேட் குறைவாக இருக்கும் காரணத்தால் தொடரை விட்டு வெளியேறிவிடும்.

இதனால் ஒட்டுமொத்த ஆர்சிபி ரசிகர்களும், நாளை மும்பைக்காக ஆதரவு அளிக்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில், குஜராத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு டுபிளஸிஸ் , கோலி இணைந்து செல்ஃபி எடுத்து கொண்டாடினர். அப்போது பேசிய டுபிளஸிஸ், நாளைய போட்டியில் ரோகித் சர்மா மும்பைக்காக அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறி சிரித்தார்.

அப்போது குறுக்கிட்ட கோலி, மும்பை அணிக்காக எங்கள் 25 பேரின் ஆதரவு இருக்கிறது. மும்பை விளையாடும் அந்தப் போட்டியை மைதானத்துக்கு நேரில் சென்று ரோகித்துக்காக உற்சாகமாக குரல் கொடுக்க உள்ளோம் உன்று கூறினார். அப்போது அருகில் இருந்த டுபிளஸிஸ், மும்பை.. மும்பை.. என கத்தினார்.

இதே போன்று சமூக வலைத்தளத்திலும் எங்கள் தயவு இருந்தால் தான் உங்களுக்கு பிளே ஆப் சுற்று என்று ஆர்சிபி ரசிகர்களை மும்பை அணி ஓட்டி வருகின்றனர். ஆனால் ஐபிஎல் வரலாறு என்ன சொல்கிறது தெரியுமா? இதுவரை மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியை 2 முறை மும்பை எதிர்கொண்டுள்ளது. 2 முறையும் மும்பை தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 20, 2022, 11:18 [IST]
Other articles published on May 20, 2022
English summary
IPL 2022- Virat kohli says He will be in attendance to supporting MI மும்பைக்கு ஆதரவு அளிக்கும் கோலி.. மைதானத்திற்கு நேரில் செல்வோம் என குசும்பு.. ரோகித் காப்பாத்துப்பா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+