For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு பொறுப்பு கிடையாது.. குடும்பத்தோடு ஜாலியா இருக்கேன்.. விராட் கோலியின் ஜாலி பேட்டி

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

Recommended Video

IPL 2022: Virat Kohli Speaks About His Role In RCB Team And his Mindset| Oneindia Tamil

இந்த நிலையில், மும்பைக்கு சென்றுள்ள பெங்களூரு அணி வீரர்கள், அங்கு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். திருமணம் காரணமாக மேக்ஸ்வெல் இன்னும் ஐபிஎல் தொடருக்கு வரவில்லை.

இதனால் மாற்று திட்டத்துடன் பெங்களூரு அணி முதல் சில போட்டியில் கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அனுபவம் இல்லை

அனுபவம் இல்லை

நடப்பு சீசனில் டுபிளஸிஸ் புதிய கேப்டனாக களமிறங்குகிறார். டேவில்லியர்ஸ் ஓய்வு பெற்று விட்டார். கேஎஸ் பரத், படிக்கல் , சாஹல் ஆகியோர் வேறு அணிக்கு சென்றுவிட, பெங்களூரு அணி புதிய அணியை கட்டமைத்து விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அனுபவம் இல்லாத அணியை வைத்து தான் ஆர்சிபி இம்முறை ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளது.

கோலி ஜாலி

கோலி ஜாலி

ஆனால் இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக உள்ளார் முன்னாள் கேப்டன் விராட் கோலி. குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு நேற்று தான் அணியின் பயிற்சி முகாம்க்கு கோலி திரும்பினார். அப்போது பேசிய விராட் கோலி, இந்த தொடரில் பொறுப்புகள் இல்லாமல், எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட உள்ளேன்.

நம்பிக்கை

நம்பிக்கை

என்னுடை வாழ்க்கையை நான் மிகவும் நெசிக்கிறேன். எனக்கு குடும்பமும் வந்துவிட்டது. அழகான மகள் உள்ளார். அவர் வளர்வதை பார்த்து ஜாலியாக இருக்கிறேன், குடும்பத்தோடு நேரத்தை செலவிடுகிறேன்,அதே சமயம் எனக்கு பிடித்த கிரிக்கெட்டையும் விளையாடுகிறேன். நல்ல மனநிலையில் இருப்பதால் இம்முறை நன்கு ரன் குவிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

டுபிளஸிஸ்க்கு பாராட்டு

டுபிளஸிஸ்க்கு பாராட்டு

பெங்களூரு அணியை பொறுத்தவரை, டுபிளஸில் நல்ல அனுபவ வீரர். அவரை கேப்டனாக்க வேண்டும் என்று தான் அவரை ஏலத்தில் எடுத்தோம். டுபிளஸிஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இம்முறை அவர் பல சாதனைகளை புரிவார் என நம்புகிறேன். ஆர்சிபி அணிக்கு எப்போதும் போல் உறுதுணையாக இருப்பேன். பேட்டிங்கில் ஜொலிப்பேன் என்ற நம்பிக்கையும் உள்ளது.

Story first published: Tuesday, March 22, 2022, 14:38 [IST]
Other articles published on Mar 22, 2022
English summary
IPL 2022- Virat Kohli Speaks about his role in RCB Team and his mindset எனக்கு பொறுப்பு கிடையாது.. குடும்பத்தோடு ஜாலியா இருக்கேன்.. விராட் கோலியின் ஜாலி பேச்சு..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+