Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னர் ஹாட்ரிக் அரைசதம்.. 10.3 வது ஓவரிலேயே போட்டியை முடித்த டெல்லி.. பஞ்சாப்பை ஊதி தள்ளி அசத்தல்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் கொரோனா பாதிப்பையும் மீறி டெல்லி அணி, பஞ்சாப் அணியை ஊதி தள்ளியது.

கொரோனா காரணமாக இந்தப் போட்டிக்காக டெல்லி அணி எந்த பயிற்சியும் செய்யவில்லை. ஆனால் களத்தில் பஞ்சாப்பை அடித்து நொறுக்கியது.

டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். டெல்லி அணியில் சர்பிராஸ் கான் சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து குணமடைந்த பஞ்சாப் அணி கேப்டன் மாயங் அகர்வால் அணிக்கு திரும்பினார்.

தடுமாறிய பஞ்சாப்

தடுமாறிய பஞ்சாப்

தொடக்கம் முதலே டெல்லி அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் நெருக்கடி ஏற்பட ஷிகர் தவான் 9 ரன்களில் லலித் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க , அதிரயாக விளையாட முற்பட்டு கேப்டன் அக்ர்வாலும் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பாரிஸ்டோ 9 ரன்களில் கலில் அகமது பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர்.

115 ரன்களில் சுருண்டது

115 ரன்களில் சுருண்டது

அதிரடி வீரர் லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து தடுமாறியது. அணியை காப்பாற்ற ஜித்தேஷ் சர்மா தனி ஆளாக போராடி 32 ரன்கள் எடுக்க, ஷாரூக்கான் வெறும் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மற்ற வீரர்களும் வந்த வேகத்தில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.

ஹாட்ரிக் அரைசதம்

ஹாட்ரிக் அரைசதம்

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை. சிக்சர், பவுண்டரி என்று இந்த ஜோடி பந்தை பறக்கவிட 3 ஓவரிலே 50 ரன்களை டெல்லி அணி தாண்டியது. தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் அரைசதத்தை அடித்தார்.

Recommended Video

KKR-க்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய Delhi.. Warner புது சாதனை
10.3வது ஓவரில் வெற்றி

10.3வது ஓவரில் வெற்றி

தொடர்ந்த சரவெடியை கொளுத்திய இந்த ஜோடி பவர்பிளே முடிவில் 81 ரன்கள் சேர்த்தது. பிரித்வி ஷா 20 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, வார்னர் கடைசி வரை களத்தில் நின்று 30 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இதனால் டெல்லி அணி 10,3 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Story first published: Wednesday, April 20, 2022, 22:55 [IST]
Other articles published on Apr 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+