
வீரர்கள் குறித்த வீடியோ
ஒவ்வொரு அணியும், வீரர்களின் பயிற்சி வீடியோ, ஹோட்டல் வீடியோக்கள், நேர்க்காணல் செய்வது போன்ற பல விஷயங்களை சமூக வலைதளங்களில் வெளியிடும். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, தமிழக வீரர்களை குறிவைத்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த அணி இந்த முறை வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன் இருவர் மீதும் பெரும் நம்பிக்கை வைத்து வாங்கியுள்ளது.

சுந்தரின் பெருமை
இதுகுறித்து பேசிய போது, வாஷிங்டன் சுந்தர், ஐதராபாத் அணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. டாம் மூடி, பிரைன் லாரா, டேல் ஸ்டெயின் என தலைசிறந்த வீரர்கள் பயிற்சி அளிக்கின்றனர். லாராவுடன் எப்படியாவது இணைந்து செயல்பட வேண்டும் என்பது பல இளம் வீரர்களின் ஆசை. அது எனக்கும் கிடைத்துள்ளது என பெருமையாக கூறி வந்தார்.

நட்டுவின் கேள்வி
அப்போது வீடியோவில் குறுக்கிட்ட, டி. நடராஜன், ஆர்சிபியில் இருந்து ஐதராபாத் அணிக்காக முதல் முறையாக சுந்தர் இங்கு வந்துள்ளார். " ஆர்சிபி - ஐ மிஸ் பன்றியா சுந்தர்.. இல்ல ஐதராபாத் பிடிச்சிருக்கா எனக்கேட்டார்". ஆஹா கஷ்டமான கேள்வி என யோசித்த சுந்தார், இறுதியில் ஆர்சிபியை விட, ஐதராபாத் நன்றாக உள்ளது எனத்தெரிவித்துவிட்டார்.
Oh Washington. Veedu mana Greeku Veerudu. #OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/n0zXm3u6AC
— SunRisers Hyderabad (SunRisers) March 18, 2022
Recommended Video

காவ்யாவின் நம்பிக்கை
கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய வாஷிங்டன் சுந்தர், இந்தாண்டு ரூ. 8.5 கோடிக்கு ஐதராபாத் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். அதுவும் சுந்தரை ஏலம் எடுத்தவுடன் அணி உரிமையாளர் காவ்யா மாறன் நிம்மதி பெருமூச்சுடன் சிரித்த வீடியோ மெகா ஏலத்தின் போது ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











