For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இப்போதான் ஜெயிச்சோம்.. அதுக்குள்ளயா” தமிழக வீரரால் ஐதராபாத் அணிக்கு பின்னடைவு.. அப்படி என்ன ஆனது??

மும்பை: ஐபிஎல் தொடரில் நல்ல ஒரு கம்பேக் என பெருமை கொண்ட ஐதராபாத் அணிக்கு சிறிது நேரத்திலேயே சோக செய்தி வந்துள்ளது.

Recommended Video

SRH vs LSG : பயம்காட்டிய Washington Sundar மிரண்டு போன Lucknow அணி!| Oneindia Tamil

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்தாண்டின் தொடக்கமும் சரியாக அமையவில்லை.

முதல் 2 போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி வழக்கம் போல விமர்சனங்களை வாங்கிக்கொண்டது.

அசத்தல் கம்பேக்

அசத்தல் கம்பேக்

இதன் பின்னர் புது உத்வேகத்துடன் களமிறங்கிய அந்த அணி பலமான சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தியது. இதே போல ஐபிஎல்-ல் யாராலும் வீழ்த்த முடியாத அணியாக இருந்த குஜராத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இனி ஐதராபாத் அணியும் வெற்றி பாதைக்கு திரும்புகிறது என ரசிகர்கள் வாழ்த்தி வந்தனர்.

சோகமான செய்தி

சோகமான செய்தி

இந்நிலையில் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஐதராபாத் அணியின் முன்னணி வீரராக உள்ள வாஷிங்டன் சுந்தர் குறைந்தது 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு கை விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

தற்போது நிலை என்ன

தற்போது நிலை என்ன

இதுகுறித்து பேசியுள்ள அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி, சுந்தருக்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் நல்ல காயம் உள்ளது. அதுகுறித்து பிசியோதெரபிஸ்ட் கவனித்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு அவர் பவுலிங் வீசுவது கடினம் எனக்கூறியுள்ளார். வாஷிங்டன் சுந்தரை இழப்பது ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

அசத்தல் ஃபார்ம்

அசத்தல் ஃபார்ம்

ஏனென்றால் பேட்டிங்கில் சுந்தர் 14 பந்துகளில் 40 ரன்களை பறக்கவிட்டு அசத்தினார். இதே போல பவுலிங்கிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகிறார். இப்படிபட்டவருக்கு பதிலாக மாற்று வீரருடன் களமிறக்க வேண்டிய சிக்கலில் வில்லியம்சனும் இருக்கிறார்.

Story first published: Tuesday, April 12, 2022, 16:48 [IST]
Other articles published on Apr 12, 2022
English summary
IPL 2022: Washington sundar set to miss atleast 2 match for SRH, after he got injured in hand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+