ஆர்சிபியில் நீடிக்கும் பெரிய குழப்பம்.. வசீம் ஜாஃபர் கூறிய செம விடை.. ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகம்!
மும்பை: ஆர்சிபி அணியில் நிலவி வந்த பெரும் குழப்பத்திற்கு முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் விடை கொடுத்துள்ளார்.
15வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி தான் உள்ளது.
இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அந்த அணி, இந்தாண்டு கேப்டன், ப்ளேயிங் 11 என பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது.

ஆர்சிபி அணி திட்டம்
தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கோலி இனி சுதந்திரமாக பேட்டிங் செய்வார் என்றும், பழைய மாதிரி ரன் வேட்டை நடத்துவார் என ஃ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதற்கேற்றார் போல தான் கோலியும் தயாராகி வருகிறார். ஆனால் அவர் இந்தாண்டு எந்த வரிசையில் களமிறங்குவார் என்பதில் தான் குழப்பம் நீடித்து வருகிறது.

மீண்டும் ஓப்பனிங்
கடந்த 3 சீசன்களை வைத்து பார்க்கும் போது பவர் ப்ளே ஓவர்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 130.16 ஆக உள்ளது. இதுவே மிடில் ஓவர்களை எடுத்துக்கொண்டால் 110 தான் சராசரியாக உள்ளது. மேலும் ஸ்பின்னர்களை சமாளிக்க கோலி சிரமப்படுவதால் ஓப்பனிங் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அணியில் ஏற்கனவே அனுஜ் ராவத் ஓப்பனிங் இருக்கிறார். இதனால் கோலி தனது வழக்கமான இடமான 3வது வீரராக ஆட வேண்டும் என முன்னாள் வீரர்கள் அட்வைஸ் கூறுகின்றனர்.

ஜாஃபர் அட்வைஸ்
இந்நிலையில் இதுகுறித்து வசீம் ஜாஃபர் அட்வைஸ் கூறியுள்ளார். அதில், விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்குவது தான் சரியாக இருக்கும். கோலி முதலில் நிதானமாக பந்துகளை சந்தித்துவிட்டு, அதன் பிறகு தான் போட்டியை எடுத்துச்செல்வார். ஆனால் ஓப்பனிங் ஆடினால் பவர் ப்ளேவில் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் வெகு சீக்கிரமாக விக்கெட்டை இழப்பார்.

சுவாரஸ்ய காரணம்
கோலியும், டூப்ளசிஸும் ஒரே மாதிரியான பேட்ஸ்மேன்கள் தான். இருவரும் ஒன்றாக களமிறங்கினால் பிரச்சினையாக இருக்கும். இதனால் கோலி முதல் விக்கெட்டிற்கும், அவருக்கு அடுத்தபடியாக மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்றோர் களமிறங்கினால் சிறப்பானதாக அமையும். ப்ளேயிங் 11-ம் சிறப்பானதாக அமையும்.

வெற்றி வாய்ப்பு உடையும்
கடந்த சீசனில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது, டூப்ளசிஸுடன் இளம் வீரர் ருதுராஜ் ஓப்பனிங் ஆடியது தான். எனவே அனுபவம் வாய்ந்த டூப்ளசிஸுடன் இளம் வீரர் அனுஜ் ராவத் களமிறங்கினால் முதல் விக்கெட்டிற்கு கோலி இருப்பார். அவருக்கு பின்பு, மேக்ஸ்வெல், மஹிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக் என மிடில் ஆர்டர் மிக பலமாக அமையும்.

நீடிக்கும் குழப்பம்
ஒரு புறம் மிடில் ஓவர்களில் விராட் கோலி ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், மற்றொரு புறம் ஓப்பனிங் களமிறங்கினால், ப்ளேயிங் 11ல் சமநிலையில் இல்லாமல் போய்விடும். இதனால் ஆர்சிபி நிர்வாகம் கோலியிடன் பேட்டிங் வரிசை குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. ரசிகர்களுக்கும் இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications