Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் வரும் வரை காத்திருக்க கூடாது! சிஎஸ்கேவிற்கு பெரிய சிக்கல்! என்ன செய்வார் ஜட்டு?

சென்னை: இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடக்க இருக்கும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருகிறது. ஜடேஜா கேப்டன் ஆன பின் இதுவரை சிஎஸ்கே அணி வெற்றிபெறவில்லை.

முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. அதன்பின் லக்னோ அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே தோல்வி

சிஎஸ்கே தோல்வி

கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில் 131 ரன்களை சிஎஸ்கே எடுக்க கொல்கத்தா எளிதாக 133 ரன்கள் எடுத்து வென்றது. லக்னோவிற்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் சிஎஸ்கே மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய சிஎஸ்கே 210 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய லக்னோ 19.3 ஓவரில் எளிதாக 211-4 ரன்கள் எடுத்தது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சிஎஸ்கே அணி இரண்டு போட்டியிலும் தோல்வி அடைய காரணம் சிஎஸ்கேவின் பவுலிங் சரியாக இல்லாமல் இருந்ததே. இரண்டு போட்டியிலும் அணியின் பவுலிங் அத்தனை சிறப்பாக இல்லை. முக்கியமாக அணியில் இப்போது சஹார் காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு காயம் குணமடைந்துவிட்டதாலும் காயத்திற்கு பின்பான பயிற்சிக்காக அவர் பெங்களூரில் இருக்கிறார்.

இரண்டு வாரம்

இரண்டு வாரம்

இன்னும் இரண்டு வாரம் கழித்துதான் அவர் வெளியே வருவார். அதன்பின் மும்பை வரும் அவர் சிஎஸ்கே அணியில் இணைவார். இதனால் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்கு பின்பாகவே அவர் சிஎஸ்கே அணியில் ஆட முடியும். அவர் வரும் வரை காத்திருப்பது மிகவும் தவறான முடிவாக இருக்கும். சிஎஸ்கே அணியின் பவர் பிளே பவுலிங் இதனால் மோசமாக சொதப்பி உள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

முதல் போட்டியில் சிஎஸ்கே அணியில் முதல் போட்டியில் பிராவோ மட்டுமே சிறப்பாக பவுலிங் செய்து 3 விக்கெட் எடுத்தார். புதிய இளம் பவுலரான் துஷார் தேஷ்பாண்டே விக்கெட் எதுவும் எடுக்காமல் 23 ரன்கள் கொடுத்தார். லக்னோவிற்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் சிஎஸ்கே பவுலிங் மிக மோசமாக இருந்தது. இந்த போட்டியிலும் சஹார் இல்லாத நிலையில் முகேஷ் சவுத்திரி, துஷார் தேஷ்பாண்டே என்ற இரண்டு பவுலர்களை நம்பி சிஎஸ்கே இறங்கியது.

இரண்டாவது மேட்ச்

இரண்டாவது மேட்ச்

இதில் முகேஷ் ஓவருக்கு தலா 11 ரன்களை கொடுத்தார். துஷாரும் 10 ரன்களுக்கு மேல் கொடுத்தார். அன்று போட்டியிலும் பிராவோ மற்றும் மூத்த வீரரான டிவைன் பிரெடெரியஸ் ஆகியயோர் மட்டுமே கொஞ்சம் சிறப்பாக பவுலிங் செய்தனர். டுபே போட்ட 19 இவரில் மட்டுமே 25 ரன்கள் சென்றதும் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

என்ன செய்ய வேண்டும் ?

என்ன செய்ய வேண்டும் ?

சிஎஸ்கே அணி இப்போது திணற காரணமே, பவுலர் ஆடம் மில்னே காயத்தில் இருப்பதால்தான். ஏற்கனவே சஹார் காயம் அடைந்துள்ள நிலையில் மில்னேவும் காயம் அடைந்துள்ளார். இது போக கிரிஸ் ஜோர்டன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். எல்லாம் நன்றாக நடக்கும் பட்சத்தில் இன்று அவர் ஆடும் வாய்ப்புகள் உள்ளன. சிஎஸ்கே அணிக்கு நல்ல பவுலிங் இல்லாததே தற்போது சிக்கலாக உள்ளது.

தீர்வு இதுதான்

தீர்வு இதுதான்

இதனால் சிஎஸ்கே அணி இன்றைய போட்டியிலும் இளம் பவுலர்களை மிடில் ஓவர்களில் வீச வைக்க வேண்டும். மிடில் ஓவர்களில் முடிந்த அளவு இவர்களுக்கு ரன் கொடுத்து கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் ஹாங்கரேக்கர் போன்ற பவுலர்களை களத்தில் பயன்படுத்துவது சிஎஸ்கே அணிக்கு சாதமாக இருக்கும். க்றிஸ் ஜோர்டான் இன்று மீண்டும் வரும் பட்சத்தில் சிஎஸ்கே அணிக்கு பவுலிங் பிரச்சனை தீரும் வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Sunday, April 3, 2022, 15:37 [IST]
Other articles published on Apr 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+