For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜெயசூரியா மாதிரி பொளக்கும் இலங்கை வீரர்.. யார் இந்த ராஜபக்சா? ஐபிஎலில் ஸ்ட்ரைக் ரெட் 344

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் இலங்கை வீரர்கள் கொடி கட்டி பறந்தனர். தில்சான், ஜெயசூர்யா, சங்ககாரா, ஜெயவர்த்தனே, மேத்தீயூஸ், மலிங்கா, முரளிதரன் ஆகியோர் தங்களது அணியின் நம்பிகை நட்சத்திரமாக விளங்கினர்.

இதனால் ஒவ்வொரு அணியும் இலங்கை வீரர்களை குறிவைத்து எடுக்க ஆர்வம் காட்டும். ஆனால் காலம் மாற மாற, காட்சிகள் மாறின.

குறைந்த ஆதிக்கம்

குறைந்த ஆதிக்கம்

இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற, அதன் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடிய இலங்கை வீரர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு இலங்கை வீரர்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. கடந்த சில சீசன்களாக இலங்கை வீரர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டன. இதற்கு காரணம், இலங்கையில் அடுத்த தலைமுறை வீரர்கள் தங்களுடைய முன்னோர்கள் போல் திறமையானவர்களாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

துளிர்விடும் வீரர்கள்

துளிர்விடும் வீரர்கள்

மறுபுறம் திறமையான வீரர்கள் கண்டறியப்பட்டு சரிவர வாய்ப்பு வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு அரசும் எடுத்த தீவிர நடவடிக்கையில் பயனாக மீண்டும் இலங்கை கிரிக்கெட் துளிர்விட தொடங்கியது. ஹசரங்கா, ராஜபக்சா, தீக்சானா, சமீரா, கருணரத்னே என அடுத்தடுத்து இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரில் வெற்றி கொடியை நாட்டினர்.

மிரட்டல் பேட்டிங்

மிரட்டல் பேட்டிங்

இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பஞ்சாப் அணியில் 3வது வீரராக களமிறங்கும் பனுகா ராஜபக்சா தான். பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் 22 பந்துகளில் 43 ரன்கள் விளாசிய ரைஜபக்சா, கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 9 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ரசிகர்களை வியப்படைய செய்தார் ராஜபக்சே.

ஸ்ட்ரைக் ரேட் 344

ஸ்ட்ரைக் ரேட் 344

இன்றைய ஆட்டத்தில் அவர் 3 சிக்சர், 3 பவுண்டரி என அடித்து நொறுக்கி ஸ்ட்ரைக் ரேட் 344 ஆக வைத்திருந்தார். ராஜபக்சேவின் ஆட்டம் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயசூர்யாவை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தது. ராஜபக்சா 2010ஆம் ஆண்டு அண்டர் 19 உலககோப்பையில் கேஎல் ராகுலுடன் விளையாடினார்.

ஐபிஎல் மேடை

ஐபிஎல் மேடை

அந்த தொடரில் ராஜபக்சே 253 ரன்கள் குவித்தார். இதே போன்று அண்டர் 19 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 111 பந்துகளில் 154 ரன்கள் குவித்தார். ஆனால் ராகுல் அடுத்த சில ஆண்டுகளிலேயே அடையாளம் காணப்பட்டு வாய்ப்புகள் வழங்கி இந்தியா சரியாக பயன்படுத்தியது. ஆனால் ராஜபக்சாவை இலங்கை வீணடித்துவிட்டது. இவ்வளவு சிறப்பாக விளையாடும் ராஜபக்சே இதுவரை 5 ஒருநாள், 18 டி20 போட்டியில் தான் இலங்கைக்காக விளையாடி இருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இருப்பினும் ராஜபக்சே ஐபிஎல் என்ற மேடையை சிறப்பாக பயன்படுத்தி அசத்தி வருவது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Friday, April 1, 2022, 21:07 [IST]
Other articles published on Apr 1, 2022
English summary
IPL 2022 – Who is Bhanuka Rajapaksa- Brilliant batting in IPL ஜெயசூரியா மாதிரி பொளக்கும் இலங்கை வீரர்.. யார் இந்த ராஜபக்சா? ஐபிஎலில் ஸ்ட்ரைக் ரெட் 344
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+