யார் இந்த முகேஷ் சௌத்ரி.. சிஎஸ்கேவில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
மும்பை: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
இதில் சிஎஸ்கே அணியில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் மற்றும் இந்திய வீரர் முகேஷ் சௌத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ரசிகர்கள் யார் இந்த முகேஷ் சௌத்ரி என்று தேடி வருகின்றனர். இவர் கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் என்று நினைத்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.

மகாராஷ்டிரா வீரர்
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 25 வயதான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தான் முகேஷ் சௌத்ரி. நமது ருத்துராஜ் கெய்க்வாட் தான் முகேஷ் சௌத்ரி குறித்து சிஎஸ்கே நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதனால் அவரை அழைத்து பரிசோதனை செய்த சிஎஸ்கே நிர்வாகம், ஏலத்தில் இவரை தட்டி தூக்கியது.

வாசிம் அக்ரம் போல
இதுவரை 12 டி20 போட்டியில் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதே போன்று 13 முதல் தர டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முகேஷ் சௌத்ரி வாசிம் அக்ரம் போல் பந்துவீசுகிறார் என்று உள்ளூர் கிரிக்கெட்டில் இவரை பற்றி பலரும் புகழ்ந்து பேசியுள்ளனர்.

தோனி பாராட்டு
இதே போன்று சூரத்தில் நடைபெற்ற சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டத்தில் முகேஷ் சௌத்ரி அனல் பறக்க பந்துவீசி இருக்கிறார். சில பந்துகள் தோனிக்கே கடும் சவாலாக அமைந்துள்ளது. பந்தை அவுட்ஸ்விங், இன்ஸ்விங்கும் சிறப்பாக செய்கிறார். இருப்பினும் அவரது வேகம் இன்னும் அதிகரித்தால் அபாயகரமான வீரராக வருவார் என தோனி கூறியிருக்கிறார்.
Recommended Video

எதிர்பார்ப்பு
கடைசியாக விளையாடிய 7 ஓயிட்பால் கிரிக்கெட் போட்டியில் முகேஷ் சௌத்ரி 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது சிஎஸ்கே அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். இதனால் இவர் எப்படி பந்துவீசுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications