Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா இந்த பிரபுதேசாய்?360 டிகிரியில் அடிக்கும் ஆர்சிபி வீரர்.. மேக்ஸ்வெல் போல் மிரட்டல் பேட்டிங்

மும்பை: ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கும் சுயஷ் பிரபுதேசாய், சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கலக்கினார். ஆர்சிபி அணி இன்று 2 மாற்றங்களை செய்தது.

ஹர்சல் பட்டேலுக்கு பதிலாக கோவாவை சேர்ந்த சுயஷ் பிரபுதேசாய் என்ற வீரரை ஆர்சிபி களமிறக்கியது. கோவாவை சேர்ந்த 24 வயது வீரர் என்ன செய்து விடப் போகிறார் என்று ரிசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் ஃபில்டிங்கில் மின்னல் போல் செயல்பட்டு மொயின் அலியை ரன் அவுட் ஆக்கினார். அதோடு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அதிரடி காட்டி வருகிறார் பிரபுதேசாய்.

ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

இதனால் நீங்கள் யாருப்பா இந்த பையன் என்று தேடலாம். அதற்கான விடை தான் இந்த தொகுப்பு. பிரபுதேசாய் கோவாவை சேர்ந்த ஆல் ரவுண்டர். பேட்டிங் மட்டுமல்ல பவுலிங்கும் வீச தெரியும். கோவா அணியில் இவர் 5வது இல்லை 6வது வீரராக தான் களமிறங்குவார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 150க்கு மேல் உள்ளது.

சையது முஸ்தாக் அலி

சையது முஸ்தாக் அலி

பிரபுதேசாய் எதிர்கொள்ளும் 4 பந்துகளுக்கு ஒரு முறை பவுண்டரி அடிக்க கூடியவர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். சையது முஸ்தாக் அலி தொடரில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் தனி ஆளாக நின்று கோவா அணியை வெல்ல வைத்தவர் இந்த பிரபுதேசாய். 5வது வீரராக களமிறங்கி 24 பந்துகளில் 43 ரன்கள் விளாசி அசத்தியவர்.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

சையது முஸ்தாக் அலி தொடரில் மேக்ஸ்வெல் எப்ப எல்லாம் விளையாடுவாரோ, அதே போல் ஷாட் அடித்து மிரட்டினார். இதனால் இந்த தங்கத்தை அப்படியே தூக்கியது ஆர்சிபி. ஆர்சிபி அணிக்குள் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கூட பிரபுதேசாய் 46 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். ஆர்சிபி அணி இவருக்கு முன்பே வாய்ப்பு தராமல் தவறு செய்துவிட்டது என்று தான் கிரிக்கெட் ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.

டுபிளஸிஸ் எச்சரிக்கை

டுபிளஸிஸ் எச்சரிக்கை

பிரபுதேசாய் இன்று விளையாடுகிறார் என்று சொல்லும் போதே ஆர்சிபி கேப்டன் டுபிளஸிஸ் ஒரு எச்சரிக்கை கொடுத்தார். பயிற்சியில் அபாரமாக விளையாட கூடியவர் இந்த பிரபுதேசாய். இதனால் இன்று அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார். ஆர்சிபி 50 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்து தடுமாறிய போது பிரபுதேசாய் 18 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார்.

Story first published: Tuesday, April 12, 2022, 23:04 [IST]
Other articles published on Apr 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+