Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு விரைவில் புதிய கேப்டன்.. தோனிக்கு தற்காலிக பதவி தான்.. அடுத்த கேப்டன் யார்?

மும்பை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டு இருப்பது வெறும் தற்காலிக முடிவு தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தோனிக்கு 40 வயதாகிவிட்டதால், அவரால் அதிக காலம் கேப்டனாக இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஜடேஜாவும் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

ஏற்கனவே தோனி தான் மீண்டும் கேப்டனாக வரப்போகிறார் என்று நமது தளத்தில் ஏற்கனவே சொல்லி இருந்தோம். அது உண்மையானது போலவே, தற்போது சிஎஸ்கே அணிக்கு நடப்பு சீசனிலேயே புதிய கேப்டன்கள் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட்

ருத்துராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பிறகு புதிய கேப்டனாக இருக்கும் அதீத வாய்ப்பு ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு மட்டுமே உள்ளது. ஏனெனில், ஜடேஜா மாதிரி இல்லாமல், இவருக்கு கேப்டனாக முன் அனுபவம் இருந்துள்ளது. விஜய் ஹசாரே கோப்பை போன்ற தொடரில் ருத்துராஜ் கேப்டனாக மட்டும் இல்லாமல் தொடர்ந்து 4 சதங்களையும் அடித்துள்ளார். இதனால் நடப்பு சீசனிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

மொயின் அலி

மொயின் அலி

அடுத்த கேப்டன் பொறுப்புக்கான பந்தயத்தில் இருக்கும் நபர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி. மொயின் அலி ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கும், The Hundread தொடரிலும் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பே மொயின் அலியை தான் சிஎஸ்கே நிர்வாகம் தக்க வைத்து கொண்டது. அதற்கு பின்னால் இப்படி ஒரு பிளானும் இருக்கலாம்.

அம்பத்தி ராயுடு

அம்பத்தி ராயுடு

சிஎஸ்கே கேப்டன் பந்தயத்தில் மூன்றாவதாக இருக்கும் நபர் அம்பத்தி ராயுடு. இவரும் கேப்டனாக ஆந்திர அணிக்கு இருந்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக விளையாடும் ராயுடுவுக்கு அனைத்து யுத்திகளையும் கரைத்து குடித்தவர். ரோகித், தோனி என இரண்டு கேப்டன்கள் கீழும் விளையாடி இருக்கிறார். சிஎஸ்கே ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இதனால் ராயுடுவுக்கு கேப்டன்சி அனுபவம் நிச்சயம் கைக் கொடுக்கும்.

Recommended Video

தொடர் தோல்விகளால் ஏற்பட்ட அழுத்தம்.. Dhoni மீண்டும் CSK Captain ஆக பதவியேற்றது ஏன்?
பந்தயத்தில் இல்லை

பந்தயத்தில் இல்லை

பிராவோவுக்கு வயதாகி விட்டதால் அவர் இந்த பந்தயத்தில் இல்லை. ஜடேஜாவும் முடியாது என்று பாதியிலேயே போய்விட்டதால் அவரும் இனி கேப்டன் பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட மாட்டார். ரெய்னா சிஎஸ்கே அணியிலேயே இல்லாததால் , அவருக்கு வாய்ப்பு இருக்கலாம் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் அதனை இப்போதே அழித்துவிடுங்கள். வயது படி வைத்து பார்த்தால், ருத்துராஜ்கே அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, May 1, 2022, 17:27 [IST]
Other articles published on May 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+