சிஎஸ்கே வை காப்பாற்ற போகும் வீரர் யார்? ரசிகர்களின் கேள்விக்கான பதில் இதோ.. அப்படி என்ன ஸ்பெஷல்?
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் தொடர் தோல்வியால் துவண்டு போய் உள்ள சிஎஸ்கே அணியை காப்பாற்றபோகும் வீரர் யார் என்று தான் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
எப்போதுமே பிளேயிங் லெவனை மாற்றாத சிஎஸ்கே அணி, இம்முறை 3 போட்டியிலும் 3 முறை பிளேயிங் லெவனை மாற்றியுள்ளது. இதுவே அணி இன்னும் செட்டில் ஆகவில்லை என்பதை காட்டுகிறது.
பந்துவீச்சில் மாற்று வீரர்களாக கொண்டு வரப்பட்ட முகேஷ் சௌத்ரியும், துஷ்பாண்டேவும் சோபிக்கவில்லை. இதனால் சிஎஸ்கே அணிக்கு எப்போது தான் வெற்றி பாதைக்கான வழி பிறக்கும்.

2015 சீசனில் மும்பை
இப்போது நடைபெறும் சம்பவங்கள் ஏதும் புதியதாக நடைபெறவில்லை. ஏற்கனவே பல அணிகளுக்கு வரலாற்றில் நிகழ்ந்தவை தான். 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதலில் விளையாடிய 7 போட்டியில் 5 போட்டியில் தோல்வியும், 2 போட்டியில் மட்டும் தான் வெற்றியும் பெற்றது. ஆனால் அந்த சீசன் முடிவில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஹர்திக் பாண்டியா
2015 சீசன் தொடக்கத்தில் முதல் 4 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை மட்டுமே பெற்றது. அதன் பிறகு தான் ஹர்திக் பாண்டியா என்ற (அப்போது) 21 வயது வீரரை மும்பை அணி பிளேயிங் லெவனில் இறக்கியது. முதல் போட்டியிலேயே 6 பந்துகளில் 16 ரன்கள் விளாசினார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக்கின் வருகையால், மும்பை அணி தலைக்கீழ் மாறி தொடர்ந்து வெற்றி பெற்றது.

ஹங்கர்கேகர்
கிட்டதட்ட அதே போல் ஒரு நிலைமையில் தான் சென்னை அணி உள்ளது. தொடர்ந்து 3 போட்டியில் தோல்வியை தழுவிவிட்டது. இப்போது யார் தான் அணியை காப்பாற்றுவார் என்ற நெருக்கடியில் உள்ளது. அதற்கு ஒரே பதில் ஹங்கர்கேகர் மட்டும் தான். ஹர்திக் பாண்டியா போல், அதிரடியாக பேட்டிங் செய்யும் இவர், பந்துவீச்சிலும் 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசுவார். அண்டர் 19 கிரிக்கெட்டில் தமது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

மும்பை பாணி
ஆனால் , சென்னை அணி இவரது திறமையை பயன்படுத்தாமல் தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்துள்ளது. மும்பை அணி ஹர்திக்கை எப்படி பயன்படுத்தியதோ, அதே போல் ஹங்கர்கேகரையும் சென்னை அணி பயன்படுத்த வேண்டும். ஹங்கர்கேகர் போன்ற புது ரத்தம் தான் சிஎஸ்கேவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும்.

திருந்துமா சிஎஸ்கே?
2020ஆம் ஆண்டு ருத்துராஜ் கெய்க்வாட் சொதப்பினார் என்பதால் அணியை விட்டு நீக்கிவிட்டு, பின்னர் கடைசி நேரத்தில் தோனி வாய்ப்பு வழங்கி தவறு செய்தாரோ, அதே போல் ஒரு தவறை இப்போதும் செய்ய கூடாது. அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறியது கடும் விமர்சனத்தை பெற்றது. ஆனால் இப்போது அப்படி கூறி ஏமாற்ற முடியாது. காரணம், சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் கூட ஹங்கர்கேகர் எரிமலை போல் வெடிக்கிறார்.


Click it and Unblock the Notifications