Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பு பண்ணிட்டீங்களே தோனி.. சிஎஸ்கே ஏலம் கேட்ட வீரர்கள் இன்று ஐபிஎல்-ல் அசத்தல்.. என்ன நடக்குது இங்க

மும்பை: மெகா ஏலத்தில் சிஎஸ்கே ஏலம் கேட்ட வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசனுக்கான போட்டிகள் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டும் தொடக்கமே பின்னடைவாக அமைந்துள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர்.

சிஎஸ்கேவின் சோகம்

சிஎஸ்கேவின் சோகம்

பெரும்பாலும் ப்ளேயிங் 11- ல் மாற்றம் கொண்டு வராமல் இருப்பது தான் தோனியின் வழக்கம். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் 3 ப்ளேயிங் 11 உடன் ஆடியுள்ளனர். இதற்கு காரணம் சரியான வீரர்கள் அமையாது இருப்பதால் தான். ஆனால் மெகா ஏலத்தில் சிஎஸ்கே ஏலம் கேட்ட வீரர்கள் இன்று சிறப்பாக ஆடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை வீரர்

மும்பை வீரர்

அதில் முதல் நபர் மும்பை அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா. சிஎஸ்கே ஏலம் கேட்ட இந்த இளம் வீரர், தனது முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்களை விளாசினார். 2வது போட்டியில் 33 பந்துகளில் 61 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

லக்னோ அணி வீரர்

லக்னோ அணி வீரர்

இந்த பட்டியலில் 2வது இடம் தீபக் ஹூடா தான். லக்னோ அணி வீரரான இவரை சிஎஸ்கே எடுக்க கடும் போட்டி போட்டது. ஆனால் இன்று இவர் முதல் போட்டியில் 41 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 51 ரன்களை விளாசியுள்ளார்.

திரிபாதி

திரிபாதி

3வது வீரராக இருப்பவர் ராகுல் திரிபாதி தான். இவரை ஏலம் எடுக்க ரூ.8.25 கோடி வரை செலவளிக்க கடும் போட்டி போட்டது. இறுதியில் ஐதராபாத் அணி 8.50 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் திரிபாதி 30 பந்துகளில் 44 ரன்களை குவித்துள்ளார். அதுவும் இக்கட்டான சூழலில் அடித்துள்ளார்.

ராகுல் தேவட்டியா

ராகுல் தேவட்டியா

இதில் அடுத்ததாக இருப்பவர் குஜராத் அணிக்காக விளையாடும் ராகுல் தேவட்டியா தான். சிஎஸ்கே ஆசைப்பட்டு எடுக்க நினைத்த இவர், இந்தாண்டு முதல் போட்டியில் 24 பந்துகளில் 40 ரன்களை விளாசினார். 2வது போட்டியில் 8 பந்துகளில் 14 ரன்களை அடித்தார். இப்படி தோனி ஸ்கெட்ச் போட்ட அனைத்து வீரர்களும் இன்று சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் சிஎஸ்கேவின் நிலைமை மட்டும் பரிதாபமாக உள்ளது என அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, April 5, 2022, 7:43 [IST]
Other articles published on Apr 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+