Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோவை வெளியே அனுப்பிய தோனி.. கேப்டனாக எடுத்த அதிரடி முடிவு.. காயமா? தனிப்பட்ட விரிசல் காரணமா?

மும்பை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் பிராவோ இல்லை.

இதற்கு காரணம் பிராவோவுக்கு காயம் என்று சொல்லப்பட்டது. ஆனால், தோனி கேப்டனாக வந்ததும் முதல் போட்டியில் அவர் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையிலேயே காயம் தான் காரணமா, இல்லை தனிப்பட்ட விரிசலா என்று நினைக்க தோன்றுவதற்கு காரணம் தோனியின் சமீபத்தில் உரையாடல் தான்.

தோனி விமர்சனம்

தோனி விமர்சனம்

தோனி, பிராவோ, ருத்துராஜ் என மூவரும் தொகுப்பாளர் ஒருவருடன் உரையாடல் நடத்தினர். அதில் பிராவோ குறித்து தோனி சகட்டு மேனிக்கு கிண்டல் செய்வதாக சாக்கில் விமர்சனம் செய்தார். பிராவோவுக்கு பாதி நேரம் அறிவே வேலை செய்யாது என்றும், அவர் பந்துவீசுவதற்கு பதிலாக விக்கெட் கீப்பங்கை விட்டுவிட்டு நானே பந்துவீசிவிடுவேன்.

மன கசப்பு?

மன கசப்பு?

காரணம், அவரை விட நான் சிறப்பாக பந்துவீசுவேன் என்று தோனி கூறியிருந்தார். தோனியின் இந்த பேச்சுக்கு பிராவோ வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தார். இதனால் இருவருக்கும் ஏதேனும் மன கசப்பு இருக்கிறதா என்று பலரும் சந்தேகத்தினர்.

பிராவோ நீக்கம்

பிராவோ நீக்கம்

அதற்கு ஏற்றார் போல், தோனி கேப்டனாக வந்ததும் பிராவோக்கு காயம் என்று கூறி பிளேயிங் லெவனை விட்டு நீக்கினார். பிராவோக்கு வயதாகி விட்டு என்பதால் உண்மையாகவே காயம் ஏற்பட்டு இருக்கலாம், இல்லையேனில் பழைய எம்.ஜி,ஆர் டேக்னிக் படி வீரர்களை ஓரங்கட்ட காயம் என்று சொல்லி சமாளித்துவிடலாம்.

Recommended Video

தொடர் தோல்விகளால் ஏற்பட்ட அழுத்தம்.. Dhoni மீண்டும் CSK Captain ஆக பதவியேற்றது ஏன்?
தோனி ஏன் அப்படி பேசினார்?

தோனி ஏன் அப்படி பேசினார்?

இதில் பிராவோக்கு நிகழ்ந்தது எந்த ரகம் என்று தெரியவில்லை. சிஎஸ்கே பொறுத்தவரை தோனி வைத்தது தான் சட்டம், அதில் மறு பேச்சுக்கு இடமே கிடையாது. ஏன் என்றால் தோனியின் டிராக் ரெக்கார்ட் அப்படி. ஆனால், இன்றைய போட்டியின் போது, நான் அடுத்த சீசனில் விளையாடுவேன், ஆனால் இந்த மஞ்சள் நிற ஜெர்சிக்கா, இல்லை வேறு மஞ்சள் நிற ஜெர்சிக்கா என்று தெரியவில்லை என தோனி கூறியதற்கு பின்னால் எதோ சரியில்லை என்று மட்டும் தெரிகிறது.

Story first published: Sunday, May 1, 2022, 22:07 [IST]
Other articles published on May 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+