For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி போட்ட கணக்கு சரிதான்.. 19வது ஓவரில் ஷிவம் தூபே பவுலிங் போட்டது ஏன்? சிஎஸ்கே தோல்விக்கான காரணம்

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி, ஷிவம் தூபேவுக்கு பவுலிங் கொடுத்ததற்கு பின்னால் உள்ள காரணம் தெரியவந்துள்ளது.

7வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெ ட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 210 ரன்களை குவித்தது.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

சிஎஸ்கே தரப்பில் ராபின் உத்தப்பா 50, மொயீன் அலி 35, ஷிவம் தூபே 49 , அம்பத்தி ராயுடு 27 என சிறப்பாக விளையாடியதால் கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதனையும் அசால்டாக கையாண்டது லக்னோ அணி. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் (40) மற்றும் குயிண்டன் டிக்காக் (61) மட்டும் முதல் விக்கெட்டிற்கு 99 ரன்களை குவித்தனர்.

லக்னோவின் அட்டகாசம்

லக்னோவின் அட்டகாசம்

தயவு செய்து அவுட்டாகி விடுங்கள் என சிஎஸ்கே ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு இருவரும் ஆடிவிட்டு சென்றனர். ஆனால் அதன் பின்னர் வந்த எவின் லீவிஸ் மற்றும் தீபக் ஹூடா பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். இருப்பினும் தோனி முன்னணி பவுலர்களை வைத்து போட்ட வியூகத்தில் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினார். ஹூடாவை 13 ரன்களுக்கு வெளியேற்றியதால், லக்னோ அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது.

ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்

ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்

இந்த சமயத்தில் தான் ஆல்ரவுண்டரான ஷிவம் தூபேவை அழைத்து 19வது ஓவரை வீசச்சொன்னார் தோனி. அந்த ஓவரில் மட்டும் 2 சிக்ஸர், 2 பவுண்டர், 2 வைட் உட்பட 25 ரன்கள் பறந்தன. இரக்கமின்றி தூபேவின் பந்தை நாளாபுறமும் விளாசினர் எவின் லீவிஸ் - ஆயுஸ் பதோனி ஜோடி. இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவையென்ற நிலை உருவாகி லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது.

தோனி சரியான வியூகம்

தோனி சரியான வியூகம்

19வது ஓவரை ஆல்ரவுண்டரான தூபேவுக்கு வழங்கி தோனி தவறு செய்துவிட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் தோனியின் வெற்றிகரமான ஃபார்முலா அது. இதுபோன்ற இக்கட்டான சூழல் வரும் போது, பழைய பவுலர்களை பேட்ஸ்மேன்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால் புது பவுலர்களை எதிர்கொள்ள தடுமாற்றம் இருக்கும். இந்த யுக்தியை தான் பல போட்டிகளில் தோனி பயன்படுத்தியிருக்கிறார்.

Recommended Video

CSK vs LSG போட்டியில் தோல்விக்கு காரணம் இதுதான் - Jadeja விளக்கம்
பின்னர் எப்படி தோல்வி பெற்றது

பின்னர் எப்படி தோல்வி பெற்றது

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று கொடுத்தது கூட இதே ஃபார்முலாவில் தான். பலமுறை வெற்றியை மட்டுமே கொடுத்துள்ள இந்த வியூகம், நேற்று சொதப்பியது. இதற்கு காரணம்,நேற்று களத்தில் நல்ல பனிப்பொழிவு இருந்தது, பந்து கைகளில் இருந்து நழுவும் அளவிற்கு இருந்ததால் சரியான லெந்தில் போட முடியவில்லை. இதுவே தோல்விக்கு காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Story first published: Friday, April 1, 2022, 17:46 [IST]
Other articles published on Apr 1, 2022
English summary
IPL 2022: Why Dhoni gives 19th over to Shivam dube, reason for CSK loss against LSG
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+