Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்கள நோட் பண்ணிக்குங்க.. ஐபிஎல் தொடரில் கலக்கப்போகும் இளம் வீரர்கள்.. பெரிய வீரர்களாக வர வாய்ப்பு

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் இளம் வீரர்கள் சிலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்த காத்துள்ளனர்.

வாய்ப்பும், திறமையும் சங்கமிக்கும் இடம் தான் ஐபிஎல். இந்த ஆண்டும் பல திறமையான இளம் வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்துள்ளன.

இதில் சிலருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம். பலருக்கு கிடைக்காமல் போகலாம். எனினும் அடுத்த நட்சத்திரங்களாக வர யாருக்கு வாய்ப்பு என்பதை தற்போது காணலாம்.

யாஷ் துல்

யாஷ் துல்

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த விராட் கோலி என்று அழைக்கப்படும் யாஷ் துல்லை டெல்லி அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அண்டர் 19 உலககோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக யாஷ் துல் ஆடிய ஆட்டம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. தற்போது ரஞ்சி தொடரிலும் யாஷ் துல் சதம், இரட்டை சதம் என கலக்கியுள்ளார். இதனால் யாஷ் துல் ஐபிஎல் மூலம் பெரிய நட்சத்திரமாக வர வாய்ப்புள்ளது.

ராஜ் பவா

ராஜ் பவா

அண்டர் 19 அணியின் அதிரடி இளம் வீரராக விளங்கும் ராஜ் பவா, பேட்டிங், பந்துவீச்சு என கலக்கினார். U19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ராஜ் பவா, பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த யுவராஜ் போல் வர வாய்ப்பு உள்ளது.

ராஜவர்த்தன் ஹங்கர்கேகர்

ராஜவர்த்தன் ஹங்கர்கேகர்

இந்திய அணியின் அடுத்த ஹர்திக் பாண்டியா என்று போற்றப்படும் ஹங்கர்கேகர் வேகப்பந்துவீச்சிலும், அதிரடி பேட்டிங்கிற்கும் பெயர் போனவர். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 சிக்சர்களை விளாசி 39 ரன்கள் குவித்தார். தற்போது ஹங்கர்கேகரை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. தோனி ஹங்கர்கேகர் மீது பயிற்சியின் போது தனி கவனம் செலுத்தி வருகிறார். இதனால் ஹங்கர்கேகர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விக்கி ஆஷ்ட்வால்

விக்கி ஆஷ்ட்வால்

U-19 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ள விக்கி ஆஷட்வால் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஷ்ட்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். துல்லியமாக பந்துவீசி நெருக்கடி தருவதில் வல்லவர். எனினும் ஆஷ்ட்வால் ரஞ்சி போட்டியில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சாதிப்பார்.

Recommended Video

IPL 2022: IPL Count Down Mumbai Indians Unique Record In The History Of IPL | Oneindia Tamil
டிவால்ட் பிரவீஸ்

டிவால்ட் பிரவீஸ்

நடந்து முடிந்த U-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றவர் தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரவீஸ். ஏபி டிவில்லியர்ஸ் போல் அதிரடியாக விளையாடுவதால் பேபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர். தற்போது மும்பை அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை அணி வீரர்களின் திறமையை சிறப்பாக பயன்படுத்துவதில் கில்லி. இதனால் பிரவீஸ் ஓவர் நைட்டில் ஓபாமாவாக வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, March 17, 2022, 17:50 [IST]
Other articles published on Mar 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+