
ஐபிஎல் டிஜிட்டல் உரிமை
இதற்காக ITT (ஏலம் கேட்பதற்கான உரிமை மற்றும் ஏல விவரங்களை ) பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. ஏலத்தில் கலந்துக்கொள்ளும் நிறுவனங்கள் ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்து இதனை முதலில் வாங்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் ஏலத்தொகையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளுக்கான ஒளிபரபரப்பு உரிமை ரூ.16, 347 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இரட்டிப்பாகி ரூ.33,000 கோடி என அடிப்படை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜாம்பவான்கள் மோதல்
இதற்காக டிஜிட்டல் துறையில் முன்னணி நிறுவனங்களான டிஸ்னி ஸ்டார், டிவி18 - வியாகாம் ( ஸ்போர்ட்ஸ் 18 ), அமேசான், ஜீ நிறுவனம், மற்றும் சோனி ஆகியவை ஏற்கனவே ITT-ஐ வாங்கிவிட்டன. இதற்கான காலக்கெடு ஏப்ரல் 10ம் தேதி வரை உள்ளதால், இன்னும் பல நிறுவனங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் ட்விஸ்ட்
இந்நிலையில் இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் யூட்டியூப் நிறுவனம் தடம் பதிக்க வந்துள்ளது. உலகளவில் பலரும் பயன்படுத்தக்கூடிய செயலியாய் யூடியூப் இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரை பயன்படுத்தி இந்தியாவில் அடுத்த கட்ட வளர்ச்சியை பெற திட்டமிட்டுள்ளனர். இதே போல ஆப்பிள் நிறுவனமும் ஐபிஎல் டிஜிட்டல் உரிமையை வாங்க காத்துள்ளது.

பயனாளர்கள் மகிழ்ச்சி
தற்போது வரை மற்ற நிறுவனங்களை விட, யூடியூப்பில் குறைந்த விலையில் பல வீடியோக்களை காண முடிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒருவேளை யூடியூப் நிறுவனமே உரிமையை பெற்றுவிட்டால் இனி பயனாளர்கள் மிகவும் சுலபமாக வீடியோக்களை பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications