Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அதெல்லாம் நியாபகம் இருக்கா" கோலிக்கு யுவ்ராஜ் சிங் சொன்ன பலே அட்வைஸ்.. இனி ஃபார்முக்கு திரும்புவாரா

மும்பை: விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவதற்காக முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

Recommended Video

IPL 2022: Yuvraj Singh’s SPECIAL ADVICE To Out Of Form Virat Kohli | Oneindia Tamil

நடப்பு ஐபிஎல் தொடரின் மூலம் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா போன்ற பல வீரர்களும், இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் விராட் கோலி மட்டும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படும் அளவிற்கு சொதப்பி வருகிறார்.

 விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

ஆர்சிபி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, இனி எந்த அழுத்தமும் இன்றி ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கவில்லை. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 128 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரின் சராசரி என்பது 16 ரன்கள் மட்டுமே ஆகும். எனவே இனி அவரை இந்திய அணி ஜெர்ஸியிலாவது பார்ப்போமா என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

மேலும் ஒரு நெருக்கடி

மேலும் ஒரு நெருக்கடி

இது ஒருபுறம் இருக்க, கோலியின் இடம் வேண்டும் என ஹர்திக் பாண்ட்யா வெளிப்படையாக கூறிவிட்டார். குஜராத் அணியில் 3வது வீரராக களமிறங்கி அசத்தி வரும் பாண்ட்யா, தனக்கு NO.3 இடம் கனவாகும். இந்த முறை நிச்சயமாக இந்திய அணியில் அதனை அடைந்தே தீருவேன் எனக் கூறியுள்ளார். இதனால் கோலிக்கு மேலும் ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது.

யுவ்ராஜ் சிங் ஐடியா

யுவ்ராஜ் சிங் ஐடியா

இந்நிலையில் கோலிக்காக யுவ்ராஜ் சிங் முக்கிய அட்வைஸை கொடுத்துள்ளார். அதில், கடந்த காலங்களில் கோலி தனது பணி மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பார். அழுத்தங்களே இல்லாமல் சுதந்திர பறவையாக என்ன வேண்டுமானாலும் செய்வார். அதனால் தான் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்தார். எனவே கோலி மீண்டும் அந்த பழைய நபராக தன்னை நினைத்துக்கொள்ள வேண்டும்.

 யாரிடமும் பார்த்ததில்லை

யாரிடமும் பார்த்ததில்லை

கோலி தனது பணியில் காட்டும் அக்கறையை போன்று கடந்த 15 வருடத்தில் எந்தவொரு வீரரிடமும் பார்க்கவில்லை. மற்ற வீரர்களை விட 4 மடங்கு அதிகமாக பணியை நேசிக்கக்கூடியவர். அவர் தற்போது செய்ய வேண்டியது தனது பழைய ஆட்டங்களை நினைவுக்கூறுவது மட்டுமே ஆகும். சிறந்த வீரர்களுக்கு தான் சோதனை காலங்கள் வருகிறது. அதனை கோலி எதிர்கொண்டு வருவார் எனத் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ-ன் திட்டம்

பிசிசிஐ-ன் திட்டம்

இது ஒருபுறம் இருக்க, கோலிக்கு ஓய்வுக் கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதாவது அடுத்ததாக வரும் தென்னாப்பிரிக்காவுடனான 5 டி20 போட்டிகளில் கோலிக்கு ஓய்வு கொடுத்தால், அவர் ஓரளவிற்கு நம்பிக்கையுடன் களமிறங்குவார் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Story first published: Thursday, April 28, 2022, 18:12 [IST]
Other articles published on Apr 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+