Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினை அசிங்கப்படுத்திய யுவ்ராஜ் சிங்.. அதுவும் அயல்நாட்டு வீரரை வைத்து.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

மும்பை: இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் செய்துள்ள ஒரு விஷயம், அஸ்வின் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

Recommended Video

IPL 2022:Ashwin-ஐ சீண்டிய Yuvraj Singh! Jos Butler குறித்து Tweet | OneIndia Tamil

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.

ஜாஸ் பட்லர் பெருந்தன்மை

ஜாஸ் பட்லர் பெருந்தன்மை

இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஹர்திக் பாண்ட்யா அடித்த பந்து ஒன்று பவுண்டரிக்கு சென்றது. அதனை டைவ் அடித்து பட்லர் தடுத்து நிறுத்தினார். எனினும் அவராக நடுவரை அழைத்து தனது கால்கள் பவுண்டரி எல்லையை தொட்டதா என பரிசோதிக்க சொன்னார். இது ரசிகர்கள் மனதை வென்றது.

யுவ்ராஜின் ட்வீட்

யுவ்ராஜின் ட்வீட்

இதுகுறித்து யுவ்ராஜ் சிங் ட்விட்டரில் புகழ்ந்தார். அதில், கிரிக்கெட்டில் இன்னும் ஜெண்டில்மேன்கள் உள்ளனர். மற்ற வீரர்கள் ஜாஸ் பட்லரை பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக சக அணி வீரரே பட்லரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என சூசகமாக சாடினார்.

அதிருப்தியில் அஸ்வின்

அதிருப்தியில் அஸ்வின்

அவர் குறிப்பிட்டது ராஜஸ்தான் வீரர் அஸ்வினை தான். ஐபிஎல் வரலாற்றில் ஜாஸ் பட்லர் - அஸ்வின் மோதலை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. மன்கட் முறையில் பட்லரை அஸ்வின் அவுட்டாக்கியது, ஒரு சிறந்த பவுலருக்கு அழகல்ல என பல விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு அஸ்வின் பதிலடியும் கொடுத்திருந்தார்.

அஸ்வினின் பதிலடி?

அஸ்வினின் பதிலடி?

இந்நிலையில் தற்போது யுவ்ராஜ் சிங் மீண்டும் அதே பிரச்சினைக்குள் அஸ்வினை இழுத்துவிட்டது பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின், கூடிய விரைவில் தகுந்த பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, April 15, 2022, 12:16 [IST]
Other articles published on Apr 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+