வார்னேவின் சாதனையை முறியடித்த சாஹல்.. சாஹலை வீணடித்த கோலி அண்ட் கோ.. இது வேற மாதிரி பவுலிங்
மும்பை: மறைந்த சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் சேன் வார்னேவின் சாதனையை இந்திய வீரர் சாஹல் முறியடித்துள்ளார்.
வார்னே எவ்வளவு பெரிய ஆளு, அவர் சாதனையை முறியடிச்சிட்டாங்களா என்ற நினைக்க தோன்றுகிறது அல்லவா.
'உண்மை தான். அப்படி ஒரு சாதனையை தான் படைத்து இருக்கார் சாஹல்.ராஜஸ்தான் அணியின் மெண்டராக இருந்தவர் வார்னே.

வார்னே சாதனை
பயிற்சியாளர், கேப்டன் என்ற பொறுப்பை சுமந்து 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை வென்று அசத்தியவர் வார்னே. ஒரு சீசனில் வார்னே அதிகபட்சமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் பிறகு எந்த ராஜஸ்தான் அணி சுழற்பந்துவீச்சாளரும் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லை.

சாஹல் முறியடிப்பு
ஆனால், 2022ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் சாஹல், தற்போது 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார்.

ஆர்சிபி செய்த தவறு
அதுமட்டுமல்லாமல் சாஹல் ஒரு சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது முதல் முறை அல்ல. கடந்த 8 ஆண்டுகளில் சாஹல் 4 முறை ஒரே சீசனில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இப்படி பட்ட வீரரை தான் ஆர்சிபி அணி ஏலத்திலும் எடுக்காமல், தக்க வைக்கவும் செய்யாமல் கைவிட்டது. சாஹல் கடந்த ஆண்டு தன்னம்பிக்கை இன்மை மற்றும் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் அவர் இந்திய அணியில் இடத்தை இழந்தார்.

இந்தியாவுக்கு பலம்
அதன் பிறகு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2ஆம் பாகத்தில் சிறப்பாக செயல்பட்டும், அவருக்கு டி20 உலககோப்பையில் இடம் கிடைக்கவில்லை. விளைவு இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால், ரோகித் சர்மாவோ சாஹலுக்கு முழு அதுரவு வழங்கி வருகிறார். இதன் காரணமாக அவர் நல்ல முறையில் பந்துவீசி வருகிறார். சாஹலின் இந்த ஃபார்ம் இந்திய அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications