For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.. நோபால் சண்டையில் யுவேந்திர சாஹல் செய்த விஷயம்.. கவனிக்கப்படாத காட்சி

மும்பை: டெல்லி அணியுடனான நோ பால் சண்டை பூதாகரமாக வெடித்த போதும், சாஹல் செய்த விஷயம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய டெல்லி அணி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்திக் கொண்டு வந்துவிட்டது.

கடைசி ஓவர் பிரச்சினை

கடைசி ஓவர் பிரச்சினை

கடைசி 6 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த போது, டெல்லி வீரர் ரோவ்மென் போவெல் முதல் மூன்று பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டினார். இதில் 3வது பந்து தான் நோ பால் சர்ச்சையை கிளப்பியது. ஃபுல்டாசாக போடப்பட்ட பந்தை போவெல் சிக்ஸருக்கு அடித்தார். எனினும் அதற்கு அம்பயர் நிதின் மேனன் நோ பால் கொடுக்கவில்லை. 3வது நடுவருக்கு கூட அப்பீல் செய்யவில்லை.

பண்ட்- ன் ஆவேசம்

பண்ட்- ன் ஆவேசம்

இதனால் ஆத்திரமடைந்த ரிஷப் பண்ட், அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டக் அவுட் முழுவதும்போர்க்களமானது. வீரர்களை விளையாடுவதை நிறுத்துங்கள், வந்துவிடுங்கள் என டிக்ளர் செய்யும் அளவிற்கு பண்ட் சென்றார். பின்னர் சமாதானப்படுத்தி டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த ஒரு நோ பால் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தால், ஆட்டத்தின் முடிவே தலைகீழாக மாறியிருக்கும்.

Recommended Video

IPL 2022 : Rishabh Pant loses cool as DC vs RR match ends with no-ball controversy | Oneindia Tamil
சாஹல் செய்த விஷயம்

சாஹல் செய்த விஷயம்

இந்நிலையில் இவ்வளவு ரணகளத்திலும் சாஹல் செய்த குசும்பு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ரோவ்மென் போவெல் நோ பால் கேட்டு அம்பயரிடம் அதிருப்தி தெரிவித்த போது, மற்றொரு பேட்ஸ்மேனான குல்தீப் யாதவ் அவருக்கு அருகில் சென்றார். அப்போது அங்கு வந்த யுவேந்திர சாஹல் குல்தீப்பை தடுத்து நிறுத்தி உன் இடத்திற்கு போ என்பது போல கூறினார்.

போவெல்லின் ரியாக்‌ஷன்

போவெல் ரியாக்‌ஷன்

இதற்கு குல்தீப் யாதவ் மறுப்பு தெரிவிக்க, சாஹல் அவரை தலையிலேயே அடித்து, இழுத்துச் சென்றார். குல்தீப் மற்றும் சாஹல் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் தான் குசும்புத்தனமாக சண்டையிட்டனர். களத்தில் ரோம்மென் போவெல் கோபத்துடன் இருக்கிறார், ஆனால் சாஹல் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த ரசிகர்கள், அதுகுறித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 23, 2022, 15:14 [IST]
Other articles published on Apr 23, 2022
English summary
IPL 2022: Yuzvendra Chahal and Kuldeep Yadav's Banter Un noticed during Rishabh Pant No Ball Controversy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+