Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை முதுகில் குத்திய சாஹல்.. மைதானத்தில் கதறி அழுத ரசிகை.. ஆர்சிபி போட்டியில் சோகம்

மும்பை: சஞ்சு சாம்சனின் அட்டகாச கீப்பிங், சாஹலின் முயற்சிகள் இணைந்து விராட் கோலி அவுட்டான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவர்களில் 169/3 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 70 ரன்களும், ஹெட்மெயர் 42 ரன்களும் எடுத்தனர்.

அட்டகாசமான தொடக்கம்

அட்டகாசமான தொடக்கம்

170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. தொடக்க ஜோடியாக கேப்டன் டூப்ளசிஸ் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியதால் 50 விக்கெட் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர். எனினும் அவர்களின் ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஆட்டத்தில் திருப்புமுணை

ஆட்டத்தில் திருப்புமுணை

ஆர்சிபியின் முன்னாள் வீரரான யுவேந்திர சாஹல் 7வது ஓவரை வீசினார். டூப்ளசிஸ் (29 ரன்கள் ) ஸ்ட்ரெய்ட்டாக சிக்ஸ் அடிக்க முயல்கிறார் எனத்தெரிந்து லெக் ஸ்டெம்ப் திசையில் எறிந்தார். இதனால் அழகாக போல்ட் கையில் கேட்ச் தந்து வெளியேறினார். இதற்கு அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத்தும் 26 ரன்களுக்கு நடையை கட்டினார்.

அதிர்ச்சி தந்த சாஹல்

அதிர்ச்சி தந்த சாஹல்

இதனால் பொறுப்பு முழுக்க விராட் கோலி மீது இறங்கியது. ஆனால் அவரை ஏமாற்றி ரன் அவுட் செய்தார் யுவேந்திர சாஹல். அவர் வீசிய ஓவரில் கோலி அடித்த பந்து அருகாமையிலேயே விழுந்தது. இதனால் அவசர அவசரமாக சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது சாதூர்யமாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், அதிவேகமாக ஓடிவந்து டைவிங்கில் பந்தை எடுத்து நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த சாஹலிடம் வீசினார்.

கோலியின் ரன் அவுட்

கோலியின் ரன் அவுட்

தன்னுடைய பழைய கேப்டன் என்று சற்றும் யோசிக்காத யுவேந்திர சாஹல், ஸ்டம்ப் அவுட் செய்து வெளியேற்றினார். இதனால் ஒட்டுமொத்த ஆர்சிபி ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். கோலி 5 ரன்களுக்கு வெளியேற ஆர்சிபி வெற்றி பாதைக்கு செல்லும் என்ற ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைந்தது.

ரசிகை குமுறல்

ரசிகை குமுறல்

விராட் கோலி சொற்ப ரன்னுக்கு பெவிலியன் சென்றதை பார்த்த ரசிகை ஒருவர் மிகுந்த ஏமாற்றத்துடன் கண்ணீர் விட்டு அழுதார். அதுவும் சாஹலே கோலியை அவுட் செய்வதா என புலம்பினார். இதுகுறித்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

Story first published: Tuesday, May 17, 2022, 11:42 [IST]
Other articles published on May 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+