இதுக்கு இவ்ளோ பெரிய வரலாறா??.. யுவேந்திர சாஹலின் போஸ் கொண்டாட்டம்.. வெளிவந்த உண்மை காரணம்!
மும்பை: யுவேந்திர சாஹல் வித்தியாசமாக போஸ் கொடுத்து கொண்டாடுவதற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை 50 லீக் போட்டிகளை தாண்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் முன்னணி வீரர்கள் சொதப்பிய போதும், ஃபார்ம் அவுட்டான வீரர்கள் பலரும் அட்டாகாசமான கம்பேக் கொடுத்துள்ளார்.

அசத்தும் சாஹல்
இதில் மிகவும் முக்கியமான நபர் யுவேந்திர சாஹல் தான். இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட சாஹல் தான். நடப்பு ஐபிஎல்-ல் அதிக விக்கெட்கள் எடுத்த பவுலராக திகழ்கிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை சாய்த்துள்ளார். இதில் குறிப்பாக ராஜஸ்தான் அணியுடனான ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும்.

நூதனமான கொண்டாட்டம்
இப்படி 5 விக்கெட் ஹவுல் மற்றும் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்துக்கொடுத்து அசத்தும் சாஹல், அதனை எப்போதும் நூதன முறையில் கொண்டாடுகிறார். அதாவது வேகமாக ஓடிச்சென்று திடீரென புற்களில் சறுக்கிவிடுகிறார். தலையில் கைவைத்து படுத்திருப்பது போன்று போஸ் கொடுத்து கொண்டாடுகிறார். இதற்கான காரணமும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.

சாஹலின் விளக்கம்
இந்நிலையில் முதல்முறையாக வாய்த்திறந்துள்ளார். அதில், 2019ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது நான் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே இருந்தேன். அப்போது டக் அவுட்டில் நான் படுத்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் மீம்களாக ட்ரெண்டானது. அனைவரும் என்னை கேலி கிண்டலடித்து சிரித்தனர்.

ஆச்சரியம்
எனவே அதனையே நான் பாசிட்டீவாக எடுத்துக் கொண்டு, வெற்றி கொண்டாட்டமாக பயன்படுத்துகிறேன். இதுமட்டுமல்லாமல் அந்த போஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என யுவேந்திர சாஹல் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் யுவேந்திர சாஹலுக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications