Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 ஆண்டு காத்திருப்பு.. ஐபிஎல் -க்கு வரும் ஜிம்பாவே புயல்.. கவுதம் கம்பீர் மாஸ்டர் ஸ்ட்ரோக் - விவரம்

மும்பை: ஐபிஎல் தொடரில் சிம்பாவே புயல் ஒன்றை 8 ஆண்டுகளுக்கு பின்பு களமிறக்குகிறார் கவுதம் கம்பீர்.

Recommended Video

IPL 2022: Zimbabwe Fast Bowler Muzarabani To Join Lucknow | Oneindia Tamil

15வது சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறுகிய நாட்களே உள்ள நிலையில் இன்னும் சில அணிகளில் வீரர்கள் விளையாடுவது உறுதியாகமலேயே உள்ளது.

வெளியேறிய இங்கி. வீரர்

வெளியேறிய இங்கி. வீரர்

புதிதாக வந்துள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறுவதாக விளக்கமளித்தார். இதனையடுத்து ப்ளேயிங் 11-ல் அவருக்கு மாற்று வீரர் தேடப்பட்டு வந்தது.

வங்கதேச வீரருக்கு வலை

வங்கதேச வீரருக்கு வலை

அதன்படி லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர், வங்கதேச வீரர் டஸ்கின் அகமது-க்கு வலைவிரித்தார். இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ள அவரிடம் முழுவீச்சில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தென்னாப்பிரிக்காவுடனான தொடர் இருப்பதால், ஐபிஎல் தொடரை டஸ்கின் புறக்கணித்ததாக தெரிகிறது.

ஜிம்பாவே பவுலர்

ஜிம்பாவே பவுலர்

இந்நிலையில் உடனடியாக மற்றொரு வீரரை பிடித்துவிட்டனர். ஜிம்பாவேவை சேர்ந்த ப்ளசிங் முசார்பானி என்ற இளம் வீரர் தான் இனி மார்க் வுட்டிற்கு மாற்றாக விளையாடவுள்ளார். ஜிம்பாவேவில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை நேற்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில், லக்னோ அணியில் விளையாட செல்லும் முசார்பானிக்கு வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்துள்ளனர்.

அசத்தல் ரெக்கார்ட்

அசத்தல் ரெக்கார்ட்

ஐபிஎல் தொடரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாவே வீரர் ஒருவர் விளையாடுகிறார். இதுவரை 21 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முசார்பானி 25 விக்கெட்களை சாய்த்துள்ளார். அவரின் எகானமி ரேட் 8 ரன்கள் மட்டுமே ஆகும். ஐபிஎல்-க்கு புதிது என்பதால், இவரை சமாளிக்க பல வீரர்களும் சிரமப்படுவது உறுதி என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, March 22, 2022, 10:48 [IST]
Other articles published on Mar 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+