3 முன்னணி அணிகளின் கேப்டன்கள் மாற்றம்? ஐபிஎல் 2023ல் புது வரவுகள்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
மும்பை: ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடரில் 3 முன்னணி அணிகளுக்கு கேப்டன்கள் மாற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி முதல் முறையாக கோப்பை வென்றது.

ஐபிஎல் 2023 தொடர்
இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் அடுத்தாண்டு ஐபிஎல் எப்போது? எங்கு நடைபெறும் என எதிர்பார்த்து உள்ளனர். நடப்பாண்டை போன்றே அடுத்த வருடமும் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதியில் நடைபெறும். 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் முன்னணி அணிகள் தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு கம்பேக் தரவுள்ளனர்.

பஞ்சாப் அணி
இந்நிலையில் 3 அணிகளுக்கு கேப்டன்களே மாறவுள்ளதாக தெரிகிறது. அதில் முதல் அணி பஞ்சாப் கிங்ஸ் தான். பஞ்சாப் அணியில் ஒரு கேப்டனாக மயங்க் அகர்வால் ஓரளவிற்கு சோபித்தார். ஆனால் கேப்டன்சி வந்தவுடன் அவரின் பேட்டிங் சொதப்பிவிட்டது. நடப்பு தொடரில் 13 இன்னிங்ஸில் 196 ரன்கள் மட்டுமே அடித்தார். கட்ந்தாண்டு 441 ரன்களை குவித்திருந்தார். எனவே ஓப்பனிங் சரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அடுத்தாண்டு பஞ்சாப் அணி ஷிகர் தவானை கேப்டனாக நியமிக்க வாய்புள்ளது.

மும்பை அணி
5 முறை சாம்பியனான மும்பை அணியிலும் கேப்டன் மாற்றப்படலாம். ரோகித் தலைமையிலான மும்பை அணி இந்தாண்டு முதல் வெற்றியை பதிவு செய்யவே போராடியது. இந்திய அணியின் 3வடிவ கேப்டன் பதவியில் இருக்கும் ரோகித், இதனையும் சமாளிக்க முடியவில்லை. இதன் வெளிப்பாடு தான் மும்பை அணியின் ஸ்கோரும், ரோகித்தின் பேட்டிங் சொதப்பலும். எனவே அடுத்தாண்டு ஜஸ்பிரித் பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் போன்றோர் கேப்டன் பதவி ஏற்கலாம்.
Recommended Video

சென்னை அணி
இதில் முக்கியமான சிஎஸ்கே அணி. இந்தாண்டு முதலில் ஜடேஜாவின் தலைமையில் வந்த சென்னை அணி, பின்னர் தோனியின் கைகளுக்கே மீண்டும் சென்றது. எனினும் அடுத்தாண்டு தோனி ஒரு கேப்டனை தயார் செய்துவிட்டு செல்ல வேண்டும். இதற்காக ஏலத்தில் ஒரு வீரரை சென்னை நிர்வாகம் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications