Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL - 6வது முறை சாம்பியன் பட்டம் வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்.. குழப்பமான பிளேயிங் லெவன் - விவரம்

மும்பை : ஐபிஎல் 16வது சீசனில் அனைவரின் கண்களும் திரும்பி இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி மீது தான். காரணம், கடந்த 2 முறையாக முதல் 4 இடங்களை கூட அவர்களால் பிடிக்க முடியவில்லை.

இம்முறை 6வது சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் தொடரின் ஆரம்பமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிர்பார்த்தது போல் இல்லை.

வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்வது போல் அடி மேல் அடி மேல் என அம்பானியின் வாரிசு அணிக்கு விழுந்து கொண்டு இருக்கிறது. எனினும் இது போன்ற நெருக்கடிகளை எப்படி எதிர்கொண்டு வெல்கிறார்கள என்பதே சாம்பியன் அணிகளின் குணமாகும். இந்த நிலையில், மும்பை அணியின் சிறந்த பிளேயிங் லெவன் என்ன என்பதை தற்போது காணலாம்.

தொடக்க ஜோடி

தொடக்க ஜோடி

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக கேப்டன் ரோகித் சர்மாவும், 15 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கப்பட்ட இஷான் கிஷனும் தான் களமிறங்குவார்கள். இஷான் கிஷனின் பார்ம் படு மோசமாக இருப்பது, கவலை அளிக்கும் விசயமாக இருந்தாலும், ஐபிஎல் என்றாலே திடீரென்று எங்கிருந்து பார்ம் வருகிறது என்று யாருக்கும் தெரியாது. இதனால் இஷான் கிஷனும் ஜொலித்தால், இந்த ஜோடி எதிரணிக்கு பாடையை கட்டிவிடும்.

அதிரடி வீரர்கள்

அதிரடி வீரர்கள்

மூன்றாவது வீரராக இருப்பவர் திலக் வர்மா. மும்பை அணியின் பயம் அறியாத இளங்கன்றாக விளங்கும் திலக் வர்மா அதிரடியாக ஆடக் கூடியவர் இந்த சீனில் அவர் தன்னுடைய திறமையை நிரூபிப்பார். 4வது இடத்தில் இருப்பது, டி20 சர்வதேச பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் தான். அவரும் ஃபார்ம்க்கு திரும்பினால் மும்பை அணிக்கு நல்லது.

தற்போது மும்பை அணியில் இருக்கும் பிரச்சினை அவர்களுடைய நடுவரிசை தான். பொலார்ட், ஹர்திக் பாண்டியா போன்ற பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் அவர்கள் சரியான மாற்று வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் டிம் டேவிட், கேமிரான் கீரின் ஆகிய 2 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

நடுவரிசை

நடுவரிசை

7வது இடத்தில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை ஆல் ரவுண்டராக பயன்படுத்தலாம். இல்லையெனில் ராமன்தீப் சிங் என்ற அதிரடி வீரரை பயன்படுத்தலாம். மும்பை அணியின் பிரச்சினையே இந்த நடுவரிசையில் போதிய அனுபவம் இல்லாதது தான். மாறாக இது ஒர்க் அவுட் ஆனால், கோப்பையை இப்போதே மும்பைக்கு எழுதி வைத்துவிடலாம்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

மும்பை அணியில் பும்ரா இல்லை. இதனால் மாற்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாததால் மும்பை இந்தியன்ஸ் அணி வெளிநாட்டு வீரர்களை தான் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் ஜோப்ரா ஆர்ச்சர் , ஜேசன் பெகுரண்டப் , டுவான் ஜான்சென் ஆகியோரை மும்பை பயன்படுத்தலாம்.

சுழற்பந்துவீச்சாளர்கள்

சுழற்பந்துவீச்சாளர்கள்

இதே போன்று கடைசி 2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற இடத்திற்கு மும்பை அணியில் குமார் கார்த்திகேயா, பியூஸ் சாவ்லா மற்றும் ஹிர்திக் சோகின் ஆகியோரை மும்பை பயன்படுத்தலாம். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், ஆல் ரவுண்டர் சுழற்பந்துவீச்சாளர் போன்ற இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குழப்பமே நிலவுகிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, இஷான் கிஷன், 3, திலக் வர்மா, 4, சூர்யகுமார் யாதவ், 5, டிம் டேவிட், 6, கேமிரான் கிரீன், 7, ராமன்தீப் சிங், 8, குமார் கார்த்திகேயா, 9, ஹிர்திக் சோகின், 10, ஜேசன் பெகுரண்டாஃப், 11, ஜோப்ரா ஆர்ச்சர்

Story first published: Wednesday, March 29, 2023, 16:44 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+