For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜேமிசனை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் விலகல்.. சிஎஸ்கேவுக்கு அடுத்த அடி.. என்ன செய்யப்போகிறார் தோனி?

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் கெயில் ஜேமிசன் ஐபிஎல்-ல் இருந்து விலகியுள்ள சூழலில் மற்றொரு முக்கியமான வீரரும் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி மார்ச் 31ம் தேதி லீக் அகமதாபாத்தில் போட்டிகள் தொடங்கி மே 28ம் தேதியன்று இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை அனைத்து அணிகளுமே தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் தோனியை காணும் குஷியில் உள்ளனர்.

சிஎஸ்கே திட்டம்

சிஎஸ்கே திட்டம்

எப்படியாவது இந்த முறை வெற்றி பெற்று தோனியை கோப்பையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என சிஎஸ்கே வீரர்கள் முணைப்பு காட்டி வருகின்றனர். இதற்காக மார்ச் முதல் வாரத்திலேயே சிஎஸ்கேவின் பயிற்சி முகாம் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெறவுள்ளனர். தோனியே நேரடியாக கலந்துக்கொண்டு அறிவுரை வழங்கவுள்ளார்.

ஜேமிசன் விலகல்

ஜேமிசன் விலகல்

இப்படிபட்ட முக்கியமான கட்டத்தில் தான் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசன் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக அறிவித்தார். நியூசிலாந்தை சேர்ந்த கெயில் ஜேமிசன், கடந்த சில நாட்களாகவே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பல்வேறு சிகிச்சைகள் நடந்துக்கொண்டே தான் இருந்தன. ஆனால் அவர் குணமடைய இன்னும் 3 மாதங்கள் வரை ஆகலாம் என்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மற்றொரு வீரர் விலகல்

மற்றொரு வீரர் விலகல்

இந்நிலையில் மற்றொரு வீரரும் விலகுவதாக தெரிகிறது. அது இங்கிலாந்தின் ஸ்டார் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தான். சென்னை அணியில் சாம் கரண் இடத்தை நிரப்பப்போகும் முக்கியமான வீரர் ஸ்டோக்ஸ் தான். அவர் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. நாட்டிற்காக விளையாடும் பணி இருப்பது இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நிச்சயம் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கு தயாராக வேண்டும் என்றால் ஸ்டோக்ஸ் 10 நாட்களுக்கு முன்பாகவே செல்ல வேண்டும். சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டி மே 20ம் தேதி நடைபெறுகிறது. இது முடிந்தவுடன் அவர் கிளம்பிவிடுவார்.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

சென்னை அணியின் அடுத்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கேற்றார் போல ரூ.16.25 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர். இப்படி இருக்கையில் அவர் முக்கியமான ப்ளே ஆஃப் சுற்றில் இருக்க மாட்டார் என்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாற்று வீரரை தோனி தேட வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது.

Story first published: Wednesday, February 22, 2023, 21:48 [IST]
Other articles published on Feb 22, 2023
English summary
After Kyle jamieson, Another star player not available in CSk during IPL 2023, here is the reason behind it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+