அகமதாபாத் : கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றியது.
இதனை சென்னை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசன் முடிவிலும் பல விருதுகள் வழங்கப்படும். இதில் யார் யாருக்கு என்ன விருதுகள் வழங்கப்பட்டது என்பதை தற்போது பார்க்கலாம்.

சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு தொகையும் இரண்டாவது இடம் பிடித்த குஜராத் அணிக்கு 13 1/2 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்சு நிற தொப்பியை 890 ரன்கள் குவித்து சுப்மன் கில் பெற்றார். இதைப் போன்று அதிக விக்கெட் எடுத்ததற்கான பர்பிள் நிற தொப்பியை சமி 28 விக்கெட்டுகளை கைப்பற்றி வென்றார்.
இதேபோன்று இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களுக்கான விருதை 36 சிக்ஸர்கள் விளாசி டுப்ளசிஸ் பெற்றார். இதேபோன்று அதிக பவுண்டரிகள் அடித்ததற்காக வழங்கப்பட்ட விருதில் சுப்மன் கில் 85 பவுண்டரிகள் அடித்து அந்த விருதை கைப்பற்றினார்.இந்தத் தொடரின் மிகச்சிறந்த மதிப்பு மிக்க வீரர் விருதை( தொடர் நாயகன்) குஜராத் அணியை சேர்ந்த சுப்மன் கில் கைப்பற்றினார். இதேபோன்று இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சிஎஸ்கே வின் கான்வே கைப்பற்றினார்.

இதேபோன்று ஐபிஎல் 16வது சீசனில் வளர்ந்து வரும் இளம் வீரர் என்ற பட்டத்தை ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் பெற்றார். இதேபோன்று அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரருக்கான விருதை நடப்பு சீசனில் ஆர் சி பி அணியின் மேக்ஸ்வெல் பெற்றார்.இதேபோன்று நடப்பு சீசனில் சிறந்த கேட்சுக்கான விருதை குஜராத் அணியின் ரஷித் கான் கைப்பற்றினார்.
இதேபோன்று விதிமுறைகளை பின்பற்றி விளையாடும் அணிக்கு வழங்கப்படும் Fairplay விருதை டெல்லி அணி வென்றது. இதேபோன்று ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்திய வீரர்களுக்கான கேம் சேஞ்சர் ஆப் த சீசன் என்ற புதிய விருதை சுப்மன் கில் பெற்றார். இதேபோன்று இந்த தொடரில் மிகப்பெரிய சிக்சர் அடித்த விருதை 115 மீட்டர் தூரம் அடித்து ஆர்சிபி வீரர் டுபிளசிஸ் அந்த விருதை தட்டி சென்றார்.