பெங்களூரு: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் இடையே நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
மன்னன் படத்தில் செயின், மோதிரம் வாங்குவதற்காக ஆசிட் அடிப்பேன் என்று மிரட்டி கவுண்டமணி, ரஜினி இருவரும் தியேட்டரில் டிக்கெட் வாங்குவார்கள். அதனை கொடுக்க முதலாளி அழைக்கும் போது இருவரும் பீதியில் கிளம்புவார்கள். அப்போது ஒருவர் வந்து, "ஆசிட் அடிப்பீங்களா.. போங்க.. கூப்பிடுறாங்க" என்று கிண்டல் செய்வார். அவரை ஆர்சிபி ரசிகராகவும், கவுண்டமணி, ரஜினியை சிஎஸ்கே ரசிகராகவும் மாற்றி, " என்ன சொன்னிங்க.. ஆர்சிபி பவுலர்ஸ்-க்கு 300 அடிச்சா கூட தோத்து போய்டுவோமா.. உங்களுக்கு 500 அடிச்சாலும் பத்தாது.. போங்க அடுத்த மேட்ச்-க்கு தோனியே பந்து போடுவாரு" என்று உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

சென்னை அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. இதனால் பயிற்சியாளராக உள்ள பிராவோவையே டெத் ஓவர்களில் பந்துவீச வைக்கலாம் என்ற பேச்சுகள் ரசிகர்களிடையே எழுந்தது. சென்னை - 28 படத்தில் வரும் சீனு கதாபாத்திரம் இளவரசுவை கிரிக்கெட் விளையாட அழைப்பது போல் காட்சி வரும். அதனை இளவரசுவாக பிராவோவையும், சீனுவாக தோனியையும் மாற்றி, "ராயுடு ஜெர்சி போட்டுக்கிட்டு இம்பேக்ட் பிளேயரா வந்து டெத் ஓவர்ஸ் பவுலிங் போடுங்க" என்று சொல்வது உருவாக்கப்பட்ட மீம் ரசிகர்களின் குமுறல்.
சென்னை அணியின் பவுலிங்கின் போது 3 முக்கிய கேட்ச்களை வீரர்கள் பிடிக்காமல் விட்டுருப்பார்கள். இருப்பினும் இறுதியாக 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இதனை கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, "இந்த உலகத்திலேயே கார் வச்சுருக்க கரகாட்ட கோஷ்டி நம்ம கோஷ்டி தான்" என்று பந்தா செய்வார். அதனை அப்படியே கவுண்டமணியாக ஆர்சிபி ரசிகர்கள் புலம்புவது போல் மாற்றி, "இந்த உலகத்துலயே இத்தன கேட்ச் விட்டும் தோத்து போகுற கோஷ்டி நம்ம கோஷ்டி தான்" என்று உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.
சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முடிவடைந்த பின் விராட் கோலி - தோனி சில மணி நேரம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர். தான் ஒரு தோனியின் ரசிகர் என்பதை விராட் கோலி பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் தோனியாக சிம்புவையும், கோலியாக கூல் சுரேஷையும் மாற்றி, "வெந்து தணிந்தது காடு.. தலைவன் எம்எஸ்டி-க்கு வணக்கத்த போடு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ரகிட ரகிட ரகம்.

சிஎஸ்கே அணியின் இளம் வீரர் பதிரானா 18வது ஓவரில் 4 ரன்கள் ஒரு விக்கெட்டும், 20 ஓவரில் 10 ரன்கள் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதனை முதல்வன் படத்தில் ரகுவரனை பேட்டி எடுத்து முடித்த பின் அர்ஜுனை பாராட்டும் வடிவேலு போல் சிஎஸ்கே ரசிகர்கள் பதிரானாவை, "அய்யா பேபி மலிங்கா.. என் செல்லமே.. கலக்கிட்டப்பா" என்று உருவாக்கப்பட்ட மீம் ஃபன்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்திற்கு முன்னேறினார். இதனை கத்தி படத்தில் வரும் கதிரேசன் விஜய், ஜீவானந்தத்தின் இடத்தில் தங்கிவிடுவார். இன்டர்வெல் பிளாக்கின் போது இனிமேல் நான்தான் ஜீவானந்தம் என்று விஜய் வசனம் பேசி இருப்பார். அதனை துஷார் தேஷ்பாண்டே பேசுவது போல் மாற்றி, "இனிமே நான் தான் சிஎஸ்கே-வோட முன்னணி பவுலர். சீசன் முடியுற வரை சஹர் காயம்னே இருக்கட்டும்" என்று உருவாக்கப்பட்ட மீம் மாஸ்.


